பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 55 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துக்குமார விஜயரகுநாத சேதுபதி காத்த தேவர் 2. செப்பேடு பெற்றவர் : திருவுத்தரகோசை மங்கை நயி னார் மங்கைநாத சுவாமி ஆலயம் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1664 துந்துபி ஆண்டு வைகாசி மாதம் (கி.பி. 7-6-1742) 4. செப்பேட்டின் பொருள் : மேலே கண்ட கோயில் சகஸ்ர - லிங்க சுவாமி அபிஷேக நை வேத்தியம் முதலியவைகளுக்கு கிராமம் நன்கொடை இந்தச் செப்பேட்டை வழங்கிய சிவகுமார முத்து விஜய ரெகுநாத சேதுபதி காத்த தேவரது விருதாவளியாக இருபத்து இரண்டு பெயர்கள் இத்தச் செப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளில் தொட்டவரை மறவாதான்’ என்ற ஒரு புதிய சிறப்புப் பெயரைத் தவிர ஏனையவை முந்தைய மன்னர்களது செப்பேடுகளில் கண்டவையாகும். சிவத்தலங்களில் மிகவும் சிறப்பான திருவாதவூர் அடிகள் போன்றவர்களால் போற்றப்படும் திருஉத்தரகோசமங்கையின், இறைவர் மங்கைநாத சுவாமி சன்னதியில் சங்கரலிங்க சுவாமிக்கு அபிஷேகம், நைவேத்தியம். திருமாலை, திருவிளக்கு ஆகிய திருக்கைங்கரியங்கள் நடத்துவதற்காக பாலையாறு ஏந்தல் என்ற கிராமத்தை தர்மமாக விட்டுக்கொடுத்ததை இந்தச் செப்பேடு