பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 எஸ். எம். கமால் தெரிவிக்கின்றது. இந்தச் செப்பேட்டில் இருந்து திருவுத்திர கோச மங்கை இறைவன் பெயர் மங்கைநாத சுவாமி என்றும் இறைவியின் பெயர் வாரேறுபூண்முலை அம்மன் என்றும் தெரிய வருகிறது. ஆனால் இப்பொழுது சுவாமியின் பெயர் மங்கள ஈஸ்வரர் என்றும் அம்மனின் பெயர் மங்கள ஈஸ்வரி என்றும் வழங்கப்பட்டு வருகிறது. திருவாசகத்தின் பகுதிகளான நீத்தல் விண்ணப்பத்தையும், திருப்பொன்னுாசலையும் இந்த திருக்கோயி லில் தான், திருவாதவூரடிகள் இயற்றினார், இந்தப் பாடல் களில் உத்தரகோச மங்கைக்கு:அரசே என்று விளித்து பாடு கிறார். இறைவன், இறைவி பெயர் எதுவும் இல்லாமல் திரு வாசகம் புனையப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தச்செப்பேடு திருஉத்திரகோசமங்கை இறைவி யின் சுக்கிர வாரக்கட்டளை திருநந்தா விளக்கு, நந்தவனம், அம்மன் எழுந்தருப்பண்ணல் ஆகியவைகளுக்கு தேரிருவேலி கிராமத்தில் உள்ள காவல்காணியான வீசு கொண்ட தேவன், காவல் நஞ்சை பத்தொன்பது மாநிலமும் புஞ்சை திட்டு நிலங் களையும், சர்வமானியமாக கட்டளையிட்டுள்ள விவரமும் தெரிய வருகிறது. அத்துடன் தேரிருவேலி கிராமத்து காவல்க் குடியான துலுக்கர் நெசவாளிகளாக இருந்தவர்கள் என்பதும் அவர்களது தறிக்கடமையும், அதில் உண்டாகிய காவல் சுதந்திரப் பணமும் கோயிலுக்குரியதாகக் கட்டளையிடப்பட்டதாகவும் இந்தச் செப் பேடு தெரியப்படுத்துகின்றது. இந்தச் செப்பேடு சம்பந்தப்பட்ட பாலையாறு ஏந்தல் கிராமம் இராமநாதபுரம் வட்டத்திலும், தேரிருவேலி கிராமம் முதுகுளத்துரர் வட்டத்திலும் இருக்கின்றன. முந்தைய இராமநாதபுரம் சீமையின் பாதுகாப்பு மற்றும் காவலுக்காக ஆங்காங்கு கிராமங்களில் காவலர்கள் இருந்த 6утгio . தேசகாவல், தலங்காவல் திசைகாவல், என்று மூன்று வகையான காவல் பிரிவினர் இயங்கி வந்ததை இராமநாதபுரம் மேனுயுவல் குறிப்பிடுகிறது. இன்னும் சில ஊர் களில் தும்பிச்சி காவல் என்றதொரு காவல் பணி இருந்ததை யும் இந்த நூல் தெரியப்படுத்துகின்றது. இந்தக் காவல் பணி யினை மேற்கொண்டு இருந்தவர்களுக்கு ஆங்காங்கு காணிகள்