பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 471 விட்டுக் கொடுக்கப்பட்டு இருந்ததுடன் குடிமக்களிடமிருந்து காவல் சுவந்திரம் என்ற வகைப் பணம் அல்லது விளைச்சலில் ஒரு சிறு பகுதியை வசூலித்துக் கொள்ளும் உரிமையையும் சேதுபதி மன்னர்கள் அவர்களுக்கு வழங்கி இருந்தனர். இந்தப் பணியில் துலுக்கரும் நியமனம் பெற்று இருந்த தாக (வரி. 39, 40) இந்தச் செப்பேட்டில் காணப்படுகிறது. பெரும்பாலும் இந்த கிராம மக்கள், தறிக்காரர்களாகவும் சிறுவணிகர்களாகவும் இருந்து வந்ததை முந்தைய செப்பேடு தெரியப்படுத்தினாலும் அரசுப் பணியில் காவல் காப்பவர் களாகவும் இருந்து வந்ததை இந்தச் செப்பேடு தெளிவு படுத் துகின்றது. இந்தச் செப்பேட்டில் (வரி, 39) காணப்படுகின்ற நம்முடைய காவல் குடியான என்ற தொடரில் இருந்து சேதுபதி பூமியில் வாழ்ந்த துலுக்கருக்கும் மன்னருக்கும் இடை யில் மிகவும் நெருக்கமான, வாஞ்சையுள்ள உறவு இருந்து வந்ததும் தெரியவருகிறது.