பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 56 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துக்குமார விஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் 2. செப்பேடு பெற்றவர் : ஏர்வாடி பள்ளிவாசல் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1664 துந்துபி வருடம் ஐப்பசி மீ” (கி.பி. 1-11-1742) 4. செப்பேட்டின் பொருள் : ஏர்வாடி பள்ளிவாசலுக்கு பெரிய மாயாகுளம் கிராமம் தானம் இந்தச் செப்பேட்டை வழங்கிய சேதுபதி மன்னரது விரு தாவளியாக நாற்றி ஒன்று சிறப்புப் பெயர்கள் இந்தப் பட்டயத் தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரை சேதுபதி மன்னர்களது செப்பேடுகளில் காணப்படாத எண்ணிக்கை இது. வீரரன கேசரி, சருவசீவதயாபரன், தந்தார்தார் பிறதார புத்திரன், கருதலர்கள் முடி இடறுகள் துரந்த நிருபன், கோடசமகாதான சீலன், பஞ்ச கால பயங்கரன், அம்போரு கடாட்சன் என்பன, இதுவரை சேதுபதி மன்னர் செப்பேடுகளில் பயன்படுத்தப்படாத சிறப்புப் பெயர்களாகும். இவை அனைத்தும் இந்த மன்னரது ஆட்சிக் கால வளமையும் வள்ளண்மையையும், தம் உயிரைப்போல எவ்வுயிரையும், காக்கும் தகைமையையும் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏர்வாடி பள்ளிவாசல் தர்மமாக பெரிய மாயாகுளம் கிரா மத்தை முசாபர் நல்ல இபுராகீம் என்பவருக்கு கொடுத்த பரிசாக இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்தக் கிராமத்துக்கான எல்கை விபரங்கள் கொடுக்கப்பட்டு இருப்பதுடன் இதில் கட்டுப்