பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 எஸ். எம். கமால் _ - பட்ட நஞ்சைபுள் சை நிலங்களின் பரப்பும் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது ஐம்பது கலம் நெல் விதைக்கக் கூடிய பகுதி நஞ்சை யும் நான்கு கலம் விதைப்பாட்டு புஞ்சையும் இதில் அடங்கியது ஆகும். அத்துடன் எற்கனவே திருவு த்திரகோச மங்கை ஆலயத் திற்குரியதாக இருந்த தட்டு முப்பத்திரெண்டு அரைக்காணி சதுர செவ்வல் மணிக்காடும் இந்தப் பள்ளி வாசல் தருமத்தில் சேர்த்து வழங்கப்பட்டதுடன் அதற்கான எல்கை மாலும் இந்தச் செப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தானம் சம்பந்தபட்ட ஊர், காணி ஆகியவைகளில் இருந்து மன்னருக்கு இறுக்கப்பட்டு வந்த ஊழியம், உலுப்:ை , வைக்கல் கட்டு வரி, ஆயக்கட்டு வரி, உம்பளமாட்டு வரி, நிலவரி, பள்வரி, பறைவரி, கம்பளவரி, முள்ளுவரி, காணிக்கை வரி, ஆகிய வைகளுடன் மேலும் புதிதாக ஏற்படுத்திப்படுகின்ற வருவாய் களும் பள்ளிவாசலுக்குச் சேர இந்தச் செப்பேட்டில் கட்டளை யிடப்பட்டுள்ளது. அத்துடன் உப்பு அளத்தில் மூன்றுக்கு ஒரு பறையும்; தானிய தவசங்கள் கொள் விளை, விற்பனைக்கு ஆ யம் தீர்வையும், சம்மாடம், சத்தவரி, முதலாவைகளும் ஏர்வாடி பள்ளிவாசலுக்கு சர்வமானியமாக கட்டளையிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டயத்தின் இறுதியிலும் இதனை வழங்கிய சேதுபதி மன்னரது பெயரும் முதன் முறையாக பொறிக்கப்பட் டுள்ளது. பொதுவாகப் பட்டயத்தின் இறுதியில் இத்தகைய தர்மத்தைக் காத்தவர்களுக்கும் அகிதம் பண்ணினவர்களுக்கும் கிடைக்கும் பலன்களைக் குறிப்பிடும் பகுதியில், இசுலாமிய முறைப்படியான வாசகங்கள் அமைந்து இருப்பது இந்தப்பட்ட யத்தின் சிறப்பான அம்சமாகும். அரபுத்தாயத்தில் இசுலாமிய பிரச்சாரத்தைக் தொடங்கிய பொழுது முகம்மது நபி (ஸல்) அவர்கள் தமது பணிகளில் ஒன்றாக அடிமைகளை, அவர்களுக் குரிய தொகையை அந்த அடிமைகளை வைத்திருப்பவர்களிடம் கொடுத்து வாங்கி அவர்களுக்கு உரிமை விட்டு சுதந்திர மனித ராக வாழும்படி செய்தார்கள். தமது பிரதம் சீடர்களான அபு பக்கர் போன்றவர்களையும் அவ்விதமே கொத்தடிமை முறை களை, நீக்குவதற்கு உதவி செய்யுமாறு வலியுறுத்தினார்கள்.