பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 479 ஆதலால் இந்தப்பட்டயத்தின் (வரி 65) ல் கோடி அடிமை உருமை கொண்டுவிட்ட பலன்’ என்ற வாசகம குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல இசுலாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான மக்காவிற்கு புனித யாத்திரை மேற் கொள்வதை கோடி கச்சு (ஹஜ்ஜா என்ற புனிதப்பயணம்) செய்த பலன்’ என்றும் குறிப்பிடப்பட் டுள்ளது. விகா தம் பண்ணிய வர்கள் உஸ்தாதை (பரமாச்சாரியரை) வதை பண்ணிவிச்சு மக்கத்துப் பள்ளியை இடித்த பாலத்திலே போவாராகவும். ' சபிக்கப்பட்டுள்ளது. இவ்விதம் பட்டய வாசகங்களில் ஒரு புதுமையை இந்தச் செப்பேடு புகுத்தி உள்ளது. இதனைப் போன்றே சேதுபதி மன்னரது சகிப்புத் தன் மையையும் பரந்த மனநிலையையும் இந்தச் செப்பேடு பிரதி பலிக்கின்றது. ரெகுநாத திருமலை சேதுபதி காலம் முதல் இசுலாமியப் பள்ளிவாசல்களது பராமரிப்பிற்கும் நிலம், காணிகளை வழங்கும் மரபு சேதுபதி மன்னர்களது அறச்செயல் களில் ஒன்றாக இடம் பெற்றாலும், இந்த மன்னரது தந்தையும் இவரும் முழுமையாக கிராமத்தினை பள்ளிவாசலுக்கு தானம் வழங்கிய பெருமை உடையவர்களாகிறார்கள். இந்த அறக் கொடையினை மீசல்வண்ணிக்களஞ்சியப் புலவர் அவர்கள் தமது தீனெறி விளக்கம்’ ’ என்ற இசுலாமிய தமிழ்க்காப்பியத்தில், தேறல் கொள் சரோருகப் பூந்திருவடித் தொழும்பாய் முன்னங் கூறல் போன் மேலை மாய குளமெனும் கிராமந்தன்னை மாறலிலாது பானுமதியுவ நாள் நாண் மட்டாகச் சாறுவபூமன் விட்டான் சருவமானிய மதாக . . . . . ர சேதுபதி சந்ததி பெற்ற படலம் (பாடல் 23) எனப்பாடியுள்ளார். தானம் வழங்கப்பட்ட பெரியமாயகுளம் கிராமம் பெரும் பாலும் புன்செய் நிலமாக உள்ளது. அங்குள்ள நிலம் தட்டு என்று வகைப்படுத்தி வழங்கப்பட்டது. புஞ்சைக்காடு மணக்காடு முந்தல், அடுமை, ஒஸ்தாது ஆகியவை இதே செப்பேட்டில் காணப்படும் வட்டார வழக்குகளாகும்