பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 எஸ். எம். கமால் திருமலைய இரண்ய கெற்பயாஜி சேதுபதி, ரெகுநாதன் என மாற்றமான தொடர்களில் உள்ளன. (செ. எண்கள் 14, 16 19, 20) இந்தச் செப்பேடுகளின் காப்புரைகள் ஒரே மாதிரியாக வரையப்பட்டுள்ளன. உதாரணமாக,

  • இந்த தர்மத்தை பரிபாலனம் பண்ணியவர் கோடி

சிவலிங்க பிரதிட்டையும், கோடி பிரம்ம பிரதிட்டையும் பண்ணின சுகிர்தத்தையும், யாதாமொருவன் இந்த தர்மத்திற்கு அகிதம் நினைத்தால் சேதுவிலேயும் காசி யிலேயும், கோவதையும், பிர்ம்மகத்தியும் மாத்துருக மனமும் சிசுகத்தியும் பண்ணின பாவத்தை அடைவாராக என்பன போன்ற தொடர்கள் பொறிக்கப்பட்டுள்ளன சேதுபதிச் சீமையின் சிறுபான்மையினரான இஸ்லாமிய ருக்கு வழங்கிய செப்பேடுகளில் மட்டும் அவர்களது சமயநெறிக்கு எற்றவாறு காப்புரை மாற்றங்களுடன் வரையப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 'இந்த தன்மத்துக்கு தமிழன் ஆனாலும், நாலு வர்ணத்திலேயுள்ள பேர்களும், இஸ்லாமானவர்களும் பரிபாலனம் பண்ணின பேர்களும், கெங்கைக் கரையிலேயும் சேதுவிலே யும், மக்க, மதினத்திலேயும், புண்ணியத்தலங் களிலேயும். . . . . என்று தொடர்வது கி.பி. 1734ஆம் ஆண்டைச் சேர்ந்த செப்பேடு ஒன்று. "... யாதாமொரு இஸ்லாமானவர்களில் பரிபாலனம் பண்ணி விச்சவர்கள், கோடி அடிமை கொண்டு உருமை விட்ட பலனும் கோடி கச்சுச் செய்த பலனும் அடைவாராகவும், இந்த தன்மத்துக்கு விகாதம் பண்ணினவர்கள் மாதா, பிதா, ஒஸ்தாதை வதை பண்ணிவிச்சு மக்கத்துப் பள்ளியை இடித்த பாவத்தில் போவாராகவும் . . . . . என்று இன்னொரு செப்பேட்டில் குறிப்பிட்டிருப்பது இஸ்லாமிய ரது அடிப்படைக் கொள்கைகளைச் சிறப்பாக இந்தச் சொற் றொடர்கள் மூலம் புலப்படுத்தி உள்ளனர்