பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 9.4 எஸ் எம் . கமால் மீது அழகிய சிற்றம்பலக் கவிராயரது வழியினரான குழந்தைக் கவிராயர் மான் விடு தூது என்ற சிற்றிலக்கியத்தைப் படைத்துப் பொன்னும் பொருளும் பரிசாகப் பெற்றார். வேறு சில தனிப் பாடல்களிலும் இந்தப் பிரதானியின் கொடைப்பண்பு புகழப் பட்டுள்ளது . பிரதானி இராமநாதபுரம் சீமையில் சேதுமார்க்கத்தில் தேவிபட்டினத்தில் கிழக்கே அக்கிரகார தர்மம், ஒன்று ஏற் படுத்த விழைந்தார். அதற்காக பிரதானிக்கு தேர்போகி கிராமத் தில் நிலக்கொடை வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக் கின்றது. இந்தக் கொடையைப் பெற்றவர் இதே ஊரைச்சார்ந்த சங்கரைய்யர் மகன் வெங்கட கிருஷ்ணய்யர் என்பவர் தானமாக வழங்கப்பட்ட நிலத்துக்கு பெருநான்கு எல்லை தெளிளாகக் கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தான இடத்திற்கு எல்லையாக பள்ள மேற்குடி பருமணல்தேரி, காட்டுப்பிச்சர் கோயில், ஊற்று ஊரணி, நரிகுமிச்சதிடல் என்பன சுட்டப்பட்டுள்ளன. இந்தப்பகுதி முந்தைய காலத்தில் மணற்பாங்கானதாக இருந்ததென்பதைக் கசிவு ஊற்றுாரணி, அருகு ஊரணி என்பவைகள் தெரிவிக் கின்றன. பெரும் மணற்திட்டுக்கள் தேரி எனப்படும். இத்தகைய தேரி இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்குக் கடற்கரையில் அமைந்திருந்தது அறியப்படுகிறது. நந்திமேடு ஊரணி, காட்டுப்பிச்சர் கோயில் என்ற பெயர்களிலிருந்து சோழர் களது ஆதிக்கம் இந்தப்பகுதியில் இருந்ததைக் குறிக்கும் வரலாற்று எச்சமாக உள்ளது. நத்தம் (வரி 65) என்ற சொல் முதன் முறையாக இந்தச்செப்பேட்டில் பயன்படுத்தத்தப்பட்டு உள்ளது, தேர்போகி ஊரின் பெயரால் மிழலைக் கூற்றத்தை யடுத்து தேர்போகி நாடு (செப்பேடு எண் 79) என்ற பெரும் பகுதி இருந்ததும் தெரியவருகிறது. சேதுபதி மன்னரது பெயர் விகுதியாக காத்த தேவரய்யர் (வரி 41) எனக் குறிப்பிட்டிருப்பது புதிய சொல்லாட்சியாகும். ஆனால் இவை கால நீட்சியினால் மறைந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்தச் சத்திரம் இன்றைய இராமநாதபுரம் வட்டம் தேர் போகி கிராமத்திற்கு கிழக்கே சிதைந்த நிலையில் உள்ளது. காட்டுப்பிச்சர் கோயில் வழக்கில் இல்லையென்றாலும் அந்தக் கோயிலும் சீரழிந்த நிலையில் உள்ளது.