பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 25 _ இந்தக் காப்புரைகளை அடுத்து செப்பேட்டை வடித்தவர் பெயருடன் செப்பேட்டு வாசகம் நிறைவு பெற்றுள்ளது. இந்த வாசகங்களில் சிலவற்றை மன்னரது செயலரும், அட்டவணை யும், பொக்கிஷமும் வரைந்து கொடுக்க அவைகளை ஆசாரி.பத்தர், பண்டாரம், நாலங்கராயன் என்ற கலைஞர்கள் சிற்றுளி கொண்டு செப்புத் தகடுகளில் வடித்துள்ளனர். பெரும்பாலான வாசகங் களை ஒலைச் சுவடிகளில் பண்டிதர்கள் வரைந்து கொடுக்க அதனை செப்பேட்டு வரைவாளர்கள், வடித்துள்ளனர். இதன் காரணமாக செப்பேட்டின் சொற்றொடர்களில் சமஸ்கிருதச் சொற்களும், ஸ்லோகமும், கிரந்தமும், தமிழ்ச் சொற்களுடன் விரவி வந்துள்ளன. அவைகளில் போதுமான பயிற்சியில்லாத கலைஞர்கள் அவைகளைப் பொறித்திருப்பதால் பதிவு செய்யப் பட்ட எழுத்துக்களும், சொற்றொடர்களும், வரிசையாக அமைய வில்லை. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடுகள் இந்த வகையைச் சேர்ந்ததாகக் கொள்ளலாம். ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில் செப்பேடு வரையும் கலை வளர்ந் திருப்பதை அந்தக் காலச் செப்பேடுகளின் தலைப்பும் வரை படங்களும், வாசகங்களும் துலக்கமாகவும் வரிசையாகவும் பொறிக்கப்பட்டிருப்பதில் இருந்து தெரிய வருகிறது. இந்தக் கால கட்டத்தில் மிகுதியான எண்ணிக்கையில் செப்பேடுகள் வழங்கப்பட்டது இதற்குக் காரணமாக இருக்கலாம். இதுவரை இனம் கொள்ளப்பட்ட சேதுபதிகளது நானுாறு செப்பேடுகளில் 278 செப்பேடுகள் இந்தக் காலத்துக்கு உரியனவாக உள்ளன. இவைகளில் காலக்குறிப்பாக சாலிவாகன சகாப்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய கிறித்தவ ஆண்டுக்கு எழுபத்தி யெட்டு ஆண்டுகள் குறைவுடையது சக கணக்காகும். அதாவது சக ஆண்டு 1914 என்பது இன்றைய கிறித்தவ ஆண்டாகும். (1914-78=1992) இந்தச் சக ஆண்டுடன் அன்றைய தமிழ் ஆண்டு திங்கள், கிழமை, நட்சத்திரம், நேரம், ஆகியவைகளுடன் செப்பேடுகள் வரையப்பட்டுள்ளன. ஒரேயொரு செப்பேடில் மட்டும் (செ. எண் 34) கேரள நாட்டில் பயன்படுத்தப்படும் கொல்லம் ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்து செப்பேடு களில் சக ஆண்டுக் கணக்கு சரியாகக் கணக்கிடப்படாமல் தவறான ஆண்டு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.