பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 OO எஸ். எம் . கமால் - --- -------- ஏற்கனவே வழங்கப்பட்ட திருப்பொற்கோட்டை கிராமத்தின் எல்கைமாலில் இருந்து தெரிய வருகிறது. இந்த இரு ஊர்கள் இன்றைய பசும்பொன் முத்துராமலிங்க மாவட்ட தேவகோட்டை வட்டத்தில் உள்ளன. இவைகளில் ஒன்றான நாட்டுச்சேரி முன்னர் ஏழுகோட்டை நாட்டில் ஒரூர் வட்டகையில் (வரி 41) இருந்ததாக தெரிய வருகிறது. இப்பொழுது ஒருள் இராமநாத புரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தின் வடபகுதியில் ஆமைந்துள்ளது. நாட்டுச்சேரிக்கான நான்கு எல்லைகள் செப் பேட்டில் குறிக்கப்பட்டிருந்தும் அந்தப் பகுதியில் இருந்து எத்த கைய வருவாய்கள் அரசுக்கு இறுக்கப்பட்டன. என்ற விபரம் இல்லாததும். நாட்டுச்சேரி பெரும்பாலும் விளைநிலங்களைக் கொண்டது என்பது புலனாகின்றது. ஆத்துக்கால், ஊத்துக்கால் (வரிகள் 48, 49) வட்டகை (வரி 41) குளக்கால் (வரி 44) நஞ்சை மால் (வரி 46) என்பன இந்த வட்டார வழக்குகள். சிவமயம் என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கும் இந்தச் செப்பேடு அறுபத்து ஏழு வரிகளைக் கொண்டதாக உள்ளது. செப்பேட்டை வரைந்தவர் பெயர் இல்லை என்றாலும், இந்தச் செப்பேட்டின் கைப்பிடியின் கீழ் புடைச் சிற்பமாக நடராஜரின் ஆனந்த தாண்டவம். சிவகாமிஅம்மை, காளிகாதேவி. பதஞ்சலி வியாக்கிர பாதர் அரிய பிரதிமைகளைப் படைத்தவர் மிகவும் தேர்ந்த கலைஞர் என்பது உறுதி.