பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 எஸ். எம் . கமால் 1) செ. எண். 30 - இந்தச் செப்பேட்டில் சகம் 1500 பிரபவ, ஆண்டு ஆனி மாதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பிரபவ ஆண்டிற்கு நேரான சகம் 1500 அல்ல. அத்துடன் இதனை வழங்கிய ரெகுநாத கிழவன் சேதுபதியின் ஆட்சிக்காலத்திற்கும் இந்தச் சகம் எண் பொருந்தி வரவில்லை. இந்த மன்னரது ஆட்சியில் வந்த பிரபவ ஆண்டு கி.பி. 1687 ஐச் சேர்ந்தது. ஆதலால் இந்தச் செப்பேட்டிற்குரிய சரியான காலம் சகம் 1909. 2) செ. எண். 58- இந்தச் செப்பேடு சிவகெங்கை பிரதானி தாண்டவராய பிள்ளை, தர்மமாக தேர்போகி கிராமத்தில் அளிக்கப்பட்ட நிலக்கொடை சம்பந்தப்பட்டது. இது சகம் 1648 பிரபவ ஆண்டு மகர மாதம் வழங்கப்பட்டதாக குறிக்கப்பட்டுள்ளது இந்த சக ஆண்டிற்குச் சரியான கிறித்தவ ஆண்டு கி.பி. 1726 ஆகும். ஆனால் இந்த ஆண்டில் சிவகங்கைச் சீமை என்ற ஒரு நாடோ அதன் பிரதானியாகத் தாண்டவராய பிள்ளையோ இல்லை யென்பது வரலாறு ஏனெனில் சிவகெங்கைச் சீமை கி.பி. 1730 ல் தான் புதிதாக ஏற்படுத்தப்பட்டது. ஆதலால் இந்தச் செப்பேடு வழங்கப்பட்ட பிரபவ ஆண்டுக்குச் சரியான சக ஆண்டு 1669 கிறித்தவ ஆண்டு கி.பி. 1747. 3) செ. எண். 35 - இந்தப் பட்டயம் திருப்புல்லாணி சுவாமி தெய்வச்சிலை பெருமாளுக்கு வழங்கப்பட்டதாகும். காலம் வெகுதான்ய - பங்குனி 15. இதில் குறிக்கப்பட்டுள்ள நாள் மட்டும் பஞ்சாங்கக் கணக்கிற்கு பொருந்திவரவில்லை. 4) செ. எண் : 43 - இந்தச் செப்பேடு சகம் 1651 செளமிய ஆண்டு சித்திரை 16ந் தேதி சுக்லபட்ச சப்தமி சுக்ல வார அனுச நட்சத்திரம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்தச் செப்பேட்டிலும் மாதமும், தேதி, நட்சத்திரங்கள், பஞ்சாங்கக் கணக்கிற்குப் பொருத்தமாக இல்லை. சுக்லபட்ச சப்தமி கி.பி. 1729 ஆவணி மாதம் 19ந் தேதி புதன்கிழமை வருகின்றது. 5) செ. எண். 48 - இராம அய்யன் என்பவருக்கு சேரந்தை கிராமத்தை சர்விமானியம்ாக வழங்கிய இந்தச் செப்பேடு சகம் 1654 சயித்திர மீ” கிருஷ்ணபட்ச அமாவாசை திங்கட்கிழமை