பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்துராமலிங்க விஜய ரெகுநாத சேதுபதி (கி. பி. 1882-1795) சேதுபதி மன்னர்களின் பட்டியலில் இறுதியாக இந்த மன்னரது பெயர் காணப்படுகிறது. இவர் பத்துமாதக் குழந்தை யாக இருக்கும்பொழுது மன்னர் பதவி இவரைத் தேடி வந்தது பதினொரு வயதை இவர் அடைந்த பொழுது ஆற்காட்டு நவாப் பும் கும்பினியாரது படையும் இராமநாதபுரம் கோட்டையைத் தாக்கிப் பிடித்தனர். இந்த இளவரசரது பிரதிநிதியாக ஆட்சி செய்த இவரது தாயார், தமக்கையர் ஆகியோருடனும் இவரும் கைது செய்யப்பட்டு திருச்சி கோட்டையில் சிறையிடப்பட்டார். இது நிகழ்ந்தது கி.பி. 1772 ஜூன் 3ந்தேதி இதனைத் தொடர்ந்து சீமையெங்கும் நவாப்புக்கு எதி ராக எழுந்த அரசியல் குழப்பம், வரிகொடாமை இயக்கம்: மக்கள் கிளர்ச்சி ஆகிய நிர்பந்தங்களினால் ஆற்காட்டு நவாப் இந்த மன்னரை கி.பி. 1781ல் சிறையினின்றும் விடுவித்து ஆட்சியை ஒப்படைத்தார். சிறந்த திட்டங்களைச் செயல்படுத்தி வந்த இந்த மன்னரது நிர்வாகத்தில் தலையிட்டு அதிகார மமதை பு டன் சலுகைகளைப் பெற இயலாது ஏமாந்த கும்பினி