பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 27 வழங்கப்பட்டதாக குறிக்கப்பட்டுள்ளது. (17-4-1732). ஆனால் இந்த அமாவாசை வந்தநாள் வியாழக்கிழமை. திங்கட்கிழமை அல்ல. ஆதலால் நாள் சரியாக குறிப்பிடவில்லை. 6) செ. எண். 54 - பூரீ ராமலிங்க குருக்கள் புத்திரன் மங்களேஸ்வர குருக்களுக்கு வழங்கப்பட்ட இந்தச் செப்பேட்டிலும் குறிக்கப்பட்டுள்ள தமிழ்த் தேதி பஞ்சாங்கக் கணக்கிற்குபொருந்தி வரவில்லை. பொதுவாக இந்தச் செப்பேடுகளில் முன்பகுதி மன்னரது விருதாவளிகளால் கணிசமான அளவிற்கு நிறைவு செய்யப்பட் டுள்ளன. அதேபோல செப்பேடுகளின் பின்பகுதியிலும் வழக்கமான ஒம்படைக் கிளவி இடம் பிடித்துக் கொண்டுள்ளது. ஆதலால் செப்பேட்டில் வரையப்படுகின்ற உரைநடைப்பகுதி சுருங்கிய அளவிற்குள்தான் அமைகின்றது. இந்தப்பகுதியில் தமிழ்ச் சொற்களுடன் சம்ஸ்கிருதம், தெலுங்கு, கிரந்தம் ஆகிய மொழிச் சொற்களும் தலை தூக்கி நிற்கின்றன. எனினும் இது தவிர்க்க முடியாத காலத்தின் கட்டாயம் எனக் கொள்ளுதல் வேண்டும். காரணம், இந்தச் செப்பேடுகள் வழங்கப்பட்ட கால நிலையில் சேதுநாட்டைச் சூழ்ந்துள்ள மதுரை தஞ்சைப் பகுதிகள் நாயக்க, மராத்திய மன்னர்களது பிடியில் இருந்து வந்தன. அவர்களால் ஊக்குவிக்கப்பட்ட தெலுங்கு. வடமொழி, தாக்கம், அடுத்துள்ள சேது நாட்டிலும் ஏற்படுவது இயல்பு. மக்களது பேச்சுத் தமிழில் இந்த மாற்று மொழிச் சொற்கள் புகுந்து அன்றாட வழக்கிலும் எழுத்திலும் இடம்பெற்றன. என்றாலும் சேதுபதி சீமைக்குரிய வட்டார வழக்குகள் இந்தச் செப்பேடுகளில் வழக்குப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். எடுத்துக் காட்டாக திருக்கோயில்கள் - காட்டுப்பிச்சர்கோயில், தாசரதிகோயில், ஏகாம்பரநாதர் கோயில், நம்புநாயகி யம்மன் கோயில், குமரர் கோயில். தெய்வத் - தெய்வச்சிலை பெருமாள், தாண்டேசு திருமேனிகள் வரர், அனுமேசுரர், மலைவளர்காதலி யம்மன், வெள்ளை துர்க்கை, கருமேனி யம்மன், வாள் அய்யனார்,