பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 529 ==== - - __ - ஆகியவை செய்வித்தும், மன்னரது பிரீதிக்கு உரியவரான காரணத்தினால் ரெகுநாத குருக்களும் அவரது வழியினரும் மன்னருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பரம்பரையாக புரோகிதம் செய்து அதன்வழி வருவாய்களை அனுபவித்துக் கொள்ளும் காணியாட்சிக்கு இந்தச் செப்பேடு ஆதாரமாக உள்ளது. இந்தப் பட்டயத்தில் பல சமஸ்கிருதச் சொற்கள் விரவி வந்துள்ளன. அவைகளில் தீர்த்தம், புரோகிதம், சேது யாத்திரை (வரி 3) சார்த்தம், (சிரார்த்தம் வரி 4) பவித்ரம், வம்சத்தார் புத்திர, பவித்ர பாரம்பரிய, தலமும், பிரதிஷ்டை, சுகிர்தம், மாதா, பிதா, குரு, சகாயம், என்பன அந்தச் சொற்கள். வைரவ தீர்த்த முதல் தனு ஷ்கோடி அனுப்பு தீர்த்தம் வரை பல தீர்த்தக்கட்டங்கள் இராமேசுவரம் நகரிலும், தீவிலும் அமைந்து புனித தீர்த்தங்களாகக் கருதப்பட்டு வந்தன. பாம் பனில் இருந்த வைரவ தீர்த்தம் கால நீட்சியில் மறைந்து விட்டது 23-12-1964ல் ஏற்பட்ட கடற்கோளினால் தனுஷ்கோடி தீர்த்தமும் அழிந்து விட்டது. இராமேசுவரம் நகரிலும் திருக் கோயிலுக்கு உள்ளேயும் உள்ள மொத்தம் இருபத்து இரண்டு தீர்த்தங்கள் சேது யாத்திரை மேற்கொள்பவர்களுடைய நீராட லுக்குரியதாக இன்று இருந்து வருகின்றன. இந்த தீர்த்தங்களின் புனிதத்தை கி. பி. பதினைந்தாவது நூற்றாண்டில் நிரம்ப அழகிய தேசிகர் இயற்றிய சேது புராணம் என்ற இலக்கியத்தில் பரக்க காணலாம்.