பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 535 தெரிவிக்கும் முறைதான் அவதானமாகும். கேள்விக்கனை களை அடுத்தடுத்து பலர் ஒரே சமயத்தில் எட்டு வினாக்களா கவும் தொடுப்பது உண்டு. இவைகளுக்கு பதிலிறுக்கும் ஆற்றல் பெற்றவர்கள் முறையே அட்டவதானி, சோடவடி அவதானி, சதாவதானி என்று அழைக்கப்பட்டனர். இந்தக் கலையில் தேர்ந்து விளங்கியவர்கள் நமது தமிழகத்தில் பதினெட்டு, பத் தொன்பதாவது நூற்றாண்டுகளில் ஆங்காங்கு ஓரிருவர் இருந் தனர். அவர்களில் முதுகுளத்துார், அட்டாவதானம், பெரிய சரவணப் பெருமாள் கவிராயர். சென்னை, அட்டாவதானம் வீராச்சாமி செட்டியார் திருப்பத்துார் அட்டாவதானம் அருள் வாக்கி அப்துல்காதிர் புலவர், முதுகுளத்துார் அட்டாவதானம் கலியாணசுந்தரம் பிள்ளை, கோட்டாறு சதாவதானம் மகாமதி சேகுதம்பிப்பாவலர் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். இத்தசைய அரிய அவதானக் கலையில் வல்ல அறிஞர் ஒருவரைப் பாராட்டிச் சிறப்பிக்கும் வகையில் இந்த நிலக்கிொன்ட யைச் சேதுபதி மன்னர் வழங்கியுள்ளார். இந்திக் க்ொடையினைப் பெற்ற சந்திரசேகர அவதானிகள் தந்தையான சேஷனும் ஒரு சிறந்த அவதானியாக இருந்தார் என்பதும் நான்கு வேதிங் களில் ஒன்றான யஜுர் வேதத்தில் வல்லவராக விள்ங்கின்ார் என்பதும் யூஜூர் பிரியாபரரான தேஷாவதானி (வரி 35, 36) என்ற செப்பேட்டுத் தொடர் தெரிவிக்கின்றது, தானம் வழங்கப்பட்ட அரியக்குடி கிராமம் கிடாத்திருக்கை நாட்டில் அமைந்திருந்தது. இதற்கு கடம்பவன நல்லூர் என்ற பெயரும் இருந்ததை செப்பேட்டு வரி 38 தெரிவிக்கின்றது. இந்தக் கிராமப் பெயர் தானம் வழங்கப்பட்ட பிறகு முத்துரெகு நாத சமுத்திரம் என்ற புதிய பெயரைப் பெற்றிருந்தது. இன்றைய பரமக்குடி வட்டத்தில் போகலூருக்குத் தென் மேற்கே இரண்டு கல் தொலைவில் அரியக்குடி புத்துார் என்ற பெயரில் தற்பொழுது வழங்கப்படுகிறது. பெரும் நான்கு எல்கையில் குறிப்பிடப்பட் டுள்ள மஞ்சியூர் தற்பொழுது மஞ்சூர் என்று வழக்கில் இருந்து வருகிறது. பெயருக்குத் தக்கவாறு (மஞ்சு மேகம்) இந்த ஊர் இன்றும் மழைவளம் பெற்று வறட்சி இல்லாத ஊராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சேதுபதி சீமையின் வட கிழக்குப் பகுதியில் அரியக்குடி என்ற பெயரினை உடைய பேரூர் ஒன்றும் உள்ளது. இந்த ஊர் நாட்டுக்கோட்டைப் பெருமக்களால் தென் திருப்பதியாகப் போற்றி வரப்பெறுகிறது. இங்குகோயில் கொண் டுள்ள இறைவர் திருவேங்கடமுடையான் என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறார்.