பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 31 தமிழ்நாடு அரசின் சென்னை ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள பதிவேடுகளில் மறவர் சீமை யில் வழங்கப் பட்ட அறுநூற்றி ஐம்பத்தியேழு நிலக் கொடைகள் பற்றிய விவாங்கள் அடங்கியுள்ளன. ஆனால் இவைகளைப் பற்றிய கூடுதலான விவரங்களைத் தெரிவிக்கக் கூடிய கையேடுகள் எதுவும் இல்லை. கி. பி. 1795-ல் மறவர் சீமையைக் கைப்பற்றி நோ டி நிர்வாகத்தைப் புகுத்திய கும்பினியார், அவர்களது தீர்வை யிலிருந்து விலக்கு அளிப்பதற்கான சர்வமானியக் கிராமங் களையும், கிராமப் பகுதிகளையும் கி. பி. 1811-ல் கணக்கெடுத் தனர். அதன் விளைவு இந்தப்பதிவேடுகள். இவைகளை வரையும் பொழுது, கணிசமான தொகையினை மொத்தத் தீர்வையி லிருந்து இழக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டதால் நிலக்கொடை பற்றிய பல ஆவணங்களை ஏற்றுக் கொள்ளாமல் மறுதளித்து உள்ளனர். குறிப்பாக, இராமநாதபுரம் கோட்டைக்கு வெளியே லெட்சுமிபுரத்தில் அமைந்துள்ள புனித குத்பு சாய்பு அவர்கள் தர்ஹாவிற்கு இராமநாதபுரம் சுங்கச் சாவடியிலிருந்து நாள் தோறும் ஒரு பணமும் வருடத் திருவிழாவிற்கு எட்டு கலம் அரிசி, இரண்டு கிடாயும் கொடுக்குமாறு சேதுபதி மன்னர் கி. பி. 1769-ல் உத்திரவிட்டதை ஏற்றுக் கொள்ளாமல், அந்த தர்மம் நடைபெற இயலாமல் செய்த விபரம் அரசு ஆவணங் களில் காணப்படுகின்றது. இதனைப் போன்றே திருப்புவனம் மலுங்கு சாகிபு தர்ஹாவிற்கும் பார்த்திபனுார் தாடிப்பக்கீர் தர்ஹாவிற்கும் இதே அவலநிலை தான் ஏற்பட்டது. காலப் போக்கில் இத்தகைய புனித இடங்கள் மறைந்து அழிவதற்கு அவர்கள் மறைமுகமாக செயல்பட்டனர் என்பது மிகையல்ல. எனினும், ஆதாரப்பூர்வமாக வேறு ஆவணங்கள் இல்லாத நிலையில், மேலேகண்ட பதிவேட்டினை சேதுபதிகளது அறக் கொடைகளுக்குரிய மூல ஆதார ஆவணமாகக் கொள்ளவேண்டிய தாக உள்ளது. இந்தப்பதிவேட்டிலும் பல நிலக்கொடைகளைப் பற்றிய முழுமையான விவரங்கள் இல்லை. கீழ்க்கண்ட நானுாறு நிலக்கொடைகளைப் பற்றிய விபரங்கள் மட்டும் கிடைத்துள்ளன. 1. Madurai District Records. Vol. 468C-A - 1833 A.D. pp. 406 2. Madurai Dist. Records Vol. 1193/27–4–1815/pp. 86-88