பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566 எஸ். எம் . கமால் SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS _ _ மேலும் இராமநாபுரம் திருவாடனைச் சீமைகளில் ஊருக்கு ஊர் நஞ்சை, புஞ்சை நிலங்களை விசாரித்துப் பார்த்து திருப்பெருந்துறை கோயிலுக்கு நான்கு அல்லது இரண்டு குறுக் கம் நிலங்களை பெற்றுக் கொள்ளவும் திருவிழாக் காலங்களில் சேதுபதி சீமை உடையார்தேவர் சீமைகளிலும் இருந்து வரப் பெறுகின்ற ஆடு மாடு காணிக்கையெல்லாம் தேவர் கட்டளையில் சேர்த்துப் பயன்படுத்திக் கொள்ளவும் இந்தச் செப்பேட்டில் அனு மதிக்கப்பட்டுள்ளது. உடையார்தேவர் சீமை என்பது கி.பி. 1730ல் முத்துவடுகநாத பெரிய உடையார்தேவர் மகன்சசிவர்ணத் தேவரால் ஏற்படுத்தப்பட்ட சிவகங்கைச் சீமையாகும். தேவர் கட்டளை எந்தச் சேதுபதி மன்னர் காலத்தில் ஏற்படுத்தப் பட்டது என்பது அறியத்தக்கதாக இல்லை. இராமேசுவரம் திருக் கோயிலின் உச்சிக்காலக் கட்டளையும், தேவர் கட்டளை என்றே வழங்கப்பட்டு வருகிறது. மேலும், திருவாபரணம், வஸ்து, வாகனம் பூசணம், பாத்திரம் பண்டம் முதலியவையெல்லாம் இந்தக் கட்டளைக்கென்றே வழங்கப்பட்டிருப்பதாகக் குறிக்கப் பட்டிருக்கின்றது. இதனை ஏற்படுத்தியவர் சடைக்கன் உடை யார் சேதுபதி என்பது ஊகம். குறுக்கம் (என்பது 90 சென்ட் நிலம்) உச்சிக்காலம், பாரிசம் என்பது வட்டார வழக்குகள்.