பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 57.1 அரசு வழியினர் சிலரும் குறிப்பாக சிறுவெள்ளி பாளையக்காரர் அந்தச் சமயத்தை ஏற்று இருந்ததால் சேதுபதி மன்னரது ஆட்சிக்கு எதிரான சூழ்நிலை மீண்டும் எழுந்தது. மதம் மாற்றத் தில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோ பாதிரியார் நாடு கடத்தப் பட்டார். சில வருடங்கள் கழித்து அதே பாதிரியார் மீண்டும் அந்தப் பணியில் ஈடுபட்டதால் அவரது உயிர் இராமநாதபுரத் திற்கு வடக்கே உள்ள ஒரியூர் கோட்டையில் 4-2-1693ந் தேதி பறிக்கப்பட்டது . கிழவனை அடுத்துப் பட்டமேறிய விஜய ரெகுநாத சேதுபதியும் மதமாற்றத்தை எதிர்த்தார். என்றாலும், புதிய மதத்தை ஏற்றவர்கள் நாளடைவில் சருகணி, பொன்னளிக் கோட்டை, ஓரியூர், இராமநாதபுரம் ஆகிய ஊர்களில் தேவால யங்கள் அமைப்பதற்கு, அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அரசு ஊக்குவிப்புகள் வழங்கப்படவில்லை. இந்தக் குறைவினை நிறைவு செய்தாற்போல இந்த மன்னர், முத்துப்பேட்டை ஆலயத்திற்கு இரண்டு கிராமங்களை பரமக்குடி வட்டத்தில் உள்ள தெஞ்சியேந்தலும், இராமநாதபுரம் வட்டத்திலுள்ள முத்துப்பேட்டையும், சர்வமானியமாக வழங்கி னார். சமயப்பொறையுடன் சேதுகாவலர்கள் ஆட்சியை நட்த்திய தற்கு இந்தச் செப்பேடு ஒரு சான்றாக அமைந்துள்ளது. முத்துப்பேட்டை ஆலயம் போர்ச்சுக்கீசியரால் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (கி. பி. 1638/39) நிர்மானிக்கப் பட்டது ஆகும், அடுத்த ஒரு நூறு ஆண்டுவரை கொச்சியிலுள்ள குரு பீடத்துடனும், இந்த தேவாலய நிர்வாகம் இணைக்கப் பட்டு இருந்தது பின்னர் புதுச்சேரி பாதிரியாரின் கண்காணிப் பிலும் இருந்து வந்து மதுரையில் சேசு சபை வலுப்பட்ட பொழுது, மதுரைபொறுப்பில் வந்தது. . Saulie re Dr. S. J. - The Reds and (1 947) pp. 345- 474