பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 33 இவைகளில் இருபத்துநான்கு செப்பேடுகளும், நான்கு கல்வெட் டுக்களும் அடங்கும். Dr. ஜேம்ஸ் பெர்ஜசும் பண்டித நடேச சாஸ்திரியும் இணைந்து தொகுத்து வெளியிட்ட தொகுப்பு நூலில் சேதுபதிகளது பதினைந்து பட்டயங்களின் படிகளையும் புதுக்கோட்டை சமஸ்தானக் கல்வெட்டுக்களின் தொகுதி,க சேதுபதிகளது நிலக்கொடை பற்றிய ஒன்பது கல்வெட்டுப் படி களையும் தெரிவிக்கின்றன. செப்பேடுகளின் பட்டியல் என்ற அரசு அருங்காட்சியக வெளியிடு இந்த மன்னர்களது பதினாறு பட்டயங்களை பட்டியல் இட்டு உள்ளது. இவைகளில் பதின் மூன்று பட்டயங்கள் மட்டும் சேது மன்னர்களைச் சேர்ந்தவை. இராமநாதபுரம் சமஸ்தான மேன்யுவல் இராமநாதபுரம் சீமையிலும் காசியிலும் உள்ள அன்னசத்திரங்கள், மடங்கள், தண்ணிர் பந்தல்கள், ஆகியவையின் பராமரிப்புக்காக சர்வமானி யமாக வழங்கிய நாற்பத்தியொன்பது கிராமங்களின் பெயர்களைத் தெரிவிக்கின்றது. இவை தவிர சேதுபதி மன்னர்கள், திருக் கோயில்கள் வடமொழி, தென்மொழி வித்தகர்கள். கலைஞர்கள் அரசு அலுவலர்கள் ஆகியவர்களுக்கு இராமநாதபுரம் - வட்டத் தில் 193 ஊர்கள் முதுகுளத்துரர் வட்டத்தில் 227, ஊர்கள், கமுதி வட்டத்தில் 82 ஊர்கள், பள்ளிமடம் வட்டத்தில் 138 ஊர்கள், இராஜசிங்கமங்கலம் வட்டத்தில் 128 ஊர்கள், அனுமந்தக்குடி வட்டத்தில் 163 ஊர்கள் என மொத்தம் 933 ஊர்களை சர்வ மானியமாக வழங்கியுள்ளனர்". இந்த ஊர்களின் மொத்த எண்ணிக்கை அன்றைய இராமநாதபுரம் அரசுப் பகுதியாக இருந்த மொத்தம் 2160 ஊர்களில் சரிபாதியாகும். நமது நாட்டு வரலாற்றில் ஒப்புவமை காணமுடியாத சாதனை வள்ளல் பாரி தனது பறம்பு நாட்டின் முன்னு று ஊர்களையும் தம்மை நாடி வந்த நல்லிசை புலவருக்கும், இரவலருக்கும் வழங்கினான் என்பது இலக்கியச் செய்தி. ஆனால் இந்த மறவர்சீமை மன்னர் கள் வழங்கியுள்ள ஊர்கள் ஆயிரத்து எண்பத்து இரண்டு. ஆனால் இந்த அறக்கொடைகள் அனைத்தையும் தெரிவிக்கக்கூடிய 4. A.S.S I. vcl. IV (1886) 5 . Pudukottai State inscriptions (1928) G. Rajaram Rao T. Manual of Ramnad. Samasthanam (1891) pp. 15, 156. 174. 178, 182, 190, 194.