பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 77 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துவிஜய ரெகுநாத முத்து சேதுபதியவர்கள் 2. செப்பேடு பெற்றவர் : வீரலெட்சுமி நாச்சியார் 3. செப்பேட்டின் காலம் : கி.பி. 1808 அக்டோபர் 4ந்தேதி செப்பேட்டின் பொருள் : பரிந்துரை இராமநாதபுரம் சேதுபதி மன்னர் செப்பேடுகளில் மிகவும் சுருக்கமானதும் சேதுபதி மன்னர்களில் இறுதியான சேதுபதி வழங்கிய இறுதியான செப்பேடு என்ற முறையிலும் வரலாற்றுச் சிறப்புடையதாக உள்ளது. கி.பி. 1600 முதல் தொடர்ந்து ஆட் சிக்கு வந்த தன்னரசு மன்னர்களான பதினாறு சேதுபதிகளில் கடைசி மன்னராவிருந்த முத்துவிஜய ரெகுநாத முத்துராமலிங்க சேதுபதியவர்கள் இதனை வழங்கியுள்ளார். இதுவரைக் காணப் பட்ட செப்பேடுகள் அனைத்தும் திருக்கோயில், திருமடம், வழி பாட்டுத்தலங்கள் மற்றும் கல்வி, கேள்வி, புலங்களில் சிறந்து விளங்கிய அறிஞர் பெருமக்களுக்கு வழங்கப்பட்ட தானங்களை குறிப்பிடுபவைகள் ஆகும். ஆனால் இந்தச் செப்பேடு அவைகளினின்றும் மாற்றமாக சேதுபதி மன்னர் தமது இரண்டாவது மனைவிக்கு பிறக்கவிருக் கும் குழந்தைக்கு அரசு ஆதரவும் சலுகையும் கொடுக்கவேண்டு மென்பதற்காக சென்னை செயின்ட் ஜார்ச் கோட்டைச் சிறை யிலிருந்த பொழுது வரைந்து வழங்கிய பரிந்துரையைக் கொண் டது. அந்த மன்னரது இறுதி விருப்பத்தைக் கொண்ட ஆவண மாகவும் இதனைக் கொள்ளலாம். ஏனெனில் அவர் 07-06-1795 முதல் தொடர்ந்து திருச்சிக் கோட்டையிலும் பாதுகாப்புக் கைதி