பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6O6 எஸ். எம் கமால் இந்த தான சாசனம் பெற்ற கிருஷ்ண அய்யங்கார் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது இரண்டாவது பிரதானி யாக பணியாற்றியவர் என்பதும் இவருக்குச் சின்னப் பிரதானி என்ற பட்டம் இருந்ததும் தெரிய வருகிறது. இவரது முழு உருவச்சிலை இராமேசுவரம் திருக்கோயில் முன்றாவது பிர காரத்தில் கிழக்குப் பகுதியில் காணப்படுகிறது. சின்னப் பிர தானியாக இருந்து ஆற்றிய பணிக்காக சேது மன்னர் இந்த தானத்தை வழங்கியுள்ளார். தானம் வழங்கப்பட்ட ஊரின் நான்கு எல்லைகளும் அங்கிருந்து கிடைக்கப்பெறும் வருவாய்களும் குறிக் கப்பட்டு இருப்பதால், அந்த ஊர் வளமைமிக்கதாக இருந்தது. தெரியவருகிறது. இன்னொரு பிரதானியான முத்திருளப்ப பிள்ளையைப் போல இவரும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பினி யாரது ஆதரவாளராக மாறிய காரணத்தால் இவரை மன்னர் சிறையிலிட்டார் என்ற செய்தியும் கும்பினியாரது ஆவணமொன் றில் காணப்படுகிறது.! இந்த செப்பேடு முழுவதும்.கிரந்த எழுத்துக்கள் விரவி வந்துள்ளன. --- 1 Madura District Records, vol. 1160 (1812) page 56,67