பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 6 * 5 --- --------- - - - விற்குப் பின்னர் திகுமயம் கோட்டையை அடுத்த பகுதியில் * புதுக்கோட்டை என்ற தன்னரசு ஒன்றை ரெகுநாத தொண்ட மான் அமைத்தார். கி.பி. 1710ல் ரெகுநாத சேதுபதி மன்னர் இறந்த பொழுது மன்னரது மனைவிகளும் ஆசை கிழத்திகளுமான நாற்பத்தியேழு பேர் தீப்புகுந்து மரணத்தைத் தழுவிய பயங்கர மான நிகழ்ச்சி இராமநாதபுரம் வரலாற்றில் பதிவு செய்யப்பட் டுள்ளது. இவர்களில் இந்தச் செப்பேட்டை வழங்கிய காதலி நாச்சியார் எரிவாய் புகும் முன்னர் தமது சகோதரர் ரெகுநாத தொண்டமானிடம் பிரியாவிடை பெற்ற உருக்கமான காட்சியை யும் இராமநாதபுரம் மேன்யுவல் தெரிவிக்கின்றது. இந்தச் செப்பேட்டில் தானமாக வழங்கப்பட்டுள்ள மேலச் சீத்தைக் கிராமம் இராமநாதபுர மாவட்டத்தில் இராமநாதபுரம் வட்டத்தில் இராமநாதபுரம் உத்திரகோசமங்கை வழியில் பத்தா வது கல்லில் சாலைக்கு மேற்புறமாக அமைந்துள்ளது. முந்தையச் சமுதாயத்தில் மகளிருக்கு சொத்துரிமை இல்லையென்றாலும், அவர்களது பெற்றோர்களும், கணவரும் வழங்கிய அன்பளிப்புக் காணிகள் சிறு தேட்டு என்று வழங்கப்பட்டன. அத்தகைய காணிகளைக் கொண்டதாக மேலச்சீத்தைக் கிராமம் இருந்திருக்க வேண்டும். செட்டிநாட்டுப்பகுதியில் இன்றும் சிறுதேட்டு , சிறு தட்டு என்று (அன்பளிப்பு என்ற பொருளில்) வழக்கில் இருந்து வருகிறது. இந்த அரச பிராட்டியார் இராமேசுவரம் சேதுவழிப் பாதையில் அன்னசத்திரம் ஒன்றையும் ஏற்படுத்தி அந்த அன்ன சாலைக்கு அருகிலுள்ள எம்மண்டலமும் கொண்டான்' ' என்ற ஊரினையும் அந்த அறச்சாலைக்குத் தானமாக வழங்கினார். அந்தக்கிராமம் இன்று என் மனம் கொண்டான் என்று வழங்கப்பட்டு வருகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற் காலப் பாண்டியப் பேரரசராக விளங்கிய மாறவர்மன் சுந்தர பாண்டியரது சிறப்பு பெயர் எம்மண்டலமும் கொண்டான் என்பது நினைவுக்கூரத்தக்கது. அந்தப் பேரரசரது நினைவாக எழுந்த இந்த ஊர் காலப்போக்கில் என்மனம் கொண்டானாக மருவி யுள்ளது.