பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 82 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் ; முத்து விஜய ரெகுநாத சேது பதி தம்பி முத்து ரெகுனாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : திருப்புல்லாணி திருக்கோயில் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1667 செளமிய ஆண்டு தை அமாவாசை நாள் (கி.பி. 1729) 4. செப்பேட்டின் பொருள் : திருப்புல்லாணிசுவாமி தெய்வ சிலை பெருமாளுக்கு ஆதன் கொத்தங்குடி கிராமம் தானம் இந்தச் செப்பேட்டிலும் இந்த மன்னரது தமையனார் முத்து விஜய ரெகுனாத சேதுபதி மன்னரது அறுபது விருதாவளி கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளன. சேது மன்னராக பதவியேற்றதுடன் சேதுபதிகள் தங்களது வழிபடு தெய்வத் திற்கு காணிக்கையாக ஊர் அல்லது நிலத்தினை மான்யமாக வழங்குவதை ஒரு மரபாக பேணி வந்தனர். அதனை ஒட்டி இந்த மன்னர் திருப்புல்லாணி தலத்து தெய்வச்சிலை பெருமா ளுக்கு ஆதன் கொத்தங்குடி கிராமத்தின் பிரமதாயம் பங்கு ஒன்று நீங்கலாக எஞ்சிய சீவிதமான பங்கினையும் இந்தக் கிராமத் தின் மடை, குழி, ஏந்தல்களையும் சர்வமான்யமாக கட்டளை யிட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்தக் கிராமம் இன்றைய முதுகுளத்துார் வட்டத்தில் அமைந்துள்ளது. பிரமதாயம் என்பது பிராமணர்களுக்காக வழங்கப்படும் காணியாகும். அதனைப் ாோன்று அரசுப் பணியில் சிறந்த சேவை செய்த போர்வீரனுக்கோ அல்லது அந்த வீர மரணமெய்