பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636 எஸ். எம். கமால் _ --- - திய அந்த வீரனது குடும்பத்தினருக்கோ வாழ்நாள் முழுவதும் அனுபவித்துக் கொள்வதற்காக வழங்கப்படும் நிலக்கொடை சீவிதம் ஆகும். ஆதன்கொத்ததங்குடி கிராமத்தில் அத்தகைய ஒரு குடும்பத்தினரின் அனுபவத்திலிருந்து அவர்களது வாழ்க் கைக்குப் பின்னர் அரசுக்கு சொந்தமாயிருந்த அந்தப் பகுதியை இந்தச் செப்பேட்டின் மூலம் மன்னர் சர்வமானியமாக வழங்கி யுள்ளதை ஜீவிதம்’ ’ என்ற சொல் குறிப்பிடுகிறது. தானம் வழங்கப்பட்ட கிராமத்தின் நான்கு எல்கைகளாகக் குறிக்கப்பட்டுள்ள ஆலங்குளம், மருதங்குளம், பூசரி, கடம்போடை கண்ணாகுடி, ஆய்க்குடி, ஐங்கலப்புல்லாணி, கீழ் விடத்தை, மேல்விடத்தை, ஆனைகால், பெரிய இலை, சின்ன இலை, ஆகியன இன்றும் வழக்கில் உள்ளன. பூசொரி பூசேரி என்றும் பெரிய இலை, சின்ன இலை, பெரிய ஏழை, சின்ன ஏழை என விகாரம் பெற்றுள்ளன. மொத்த தொகுப்பு என்ற பொருளில் கனகத்திரள் (வரி 36) என்ற சொல் குறிக்கப்பட்டு இருப் பது அருமையான முந்தைய வழக்கு. அத்துடன் திருப்புல்லாணி திருக்கோயில் இறைவர் பெயர் தெய்வச்சிலை பெருமாள் நாயனார் என்ற நல்ல தமிழ்ப்பெயரில் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே பெயர் இன்று ஆதி ஜகந்நாதப் பெருமாள்' ' என வழங்கப்படுகிறது. தானம் வழங்கப்பட்ட ஊர்ப் பெயர் ' 'ஆதன்' கொத்தன்குடியில் உள்ள 'ஆதன் முது குளத்துார் வட்டத்தில் மட்டும் வழக்கில் இருக்கிறது. ஆதன் தந்தை தான் ஆந்தை என மருவி ஒலிக்கின்றது. பிசிர் ஆந்தையரது பிசுர்க்குடியும் இந்தப் பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.