பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - - 6 4.2 எஸ். எம். கமா ல் சகம் 1651 செளமிய ஆண்டு தை மாதம் வரையப்பட்டுள்ளது. இதிலிருந்து முத்துவிஜய ரெகுநாத சேதுபதி அம்மை நோயி னால் அறந்தாங்கிப் போரில் இறந்தபொழுது அவரது இளவலான முத்துவடுகநாதன், முத்து ரெகுநாத சேதுபதி என்ற பெயரில் சிறிது காலம் இராமநாதபுரம் மன்னராக இருந்தார் என்பதை இந்தச் செப்பேடும் அடுத்து வரும் செப்பேடும் புலப்படுத்துகின்றன . இந்தக் காரணத்தினால் இவரது விருதாவளியாக இந்தச் செப் பேட்டில் எதுவும் குறிக்கப்படாமல் இவரது தமையனரான முத்து விஜய ரெகுநாத சேதுபதியின் அறுபத்திரண்டு விருதாவளிகள் மட்டும் இந்தச் செப்பேட்டில் இடம் பெற்றுள்ளன. முத்துவிஜய ரகுநாத சேதுபதியையடுத்து அரசு கட்டில் ஏறினவர். சுந்த ரேசுவர தேவர் அல்ல என்பதும் புலனாகின்றது. திருப்புல்லாணி தெய்வச்சிலை பெருமாள் நயினார் ஆலயத் திற்கு ஏற்கெனவே தானம் வழங்கப்பட்டிருந்த கீழைக்காட்டுப் பகுதி பற்றிய சிக்கல்களைத் தீர்த்து மீண்டும் திருப்புல்லாணி திருக்கோயிலுக்கு அந்தப்பகுதியை சர்வமானியமாக உத்தரவிட் டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இதில் சம்பந்தப்பட்ட கீழைக்காடு என்பது தெய்வச்சிலைப் பெருமாள் கோயில் கொண் டுள்ள திருப்புல்லாணி கிராமத்திற்கு கிழக்காகவும் கிழக்குக் கடற் கரைக்கு வடகிழக்காகவும் சேதுவழிப்பாதைக்கு தெற்காகவும் நெய்னா மரைக்கான் கிராமத்திற்கு மேற்காகவும் உள்ள பரந்த காட்டுப்பகுதியாகும். இன்றைய ரெகுநாதபுரம் வண்ணான்குண்டு தென்னம்பிள்ளை வலசை, கீரிவலசை, துத்துக்கப் வலசை ஆகிய ஊர்களைக் கொண்ட இந்தப் பகுதி தொன்றுதொட்டு தெய்வச் சிலைப் பெருமாள் நயினாரது சொத்தாக இருந்துவந்துள்ளது என்பதை அங்கே நாட்டப்பட்டுள்ள திருவாழிக்கற்கள் (வரிகள் 38, 42, 44) புலப்படுத்துகின்றன. கட்டுப்பட்டுக் கிடந்த (வரி34) தீத்து (வரி 34) திருப்பிவிட்டு (வரி 35) என்பன இந்த வட்டார வழக்குகள் ஆகும்.