பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 எஸ். எம். கமால் மதுரைக் கோட்டையை ஆக்கிரமித்து இருந்த மைசூர் மன்னர் பிரதிநிதியான தளபதி கோப்பை போரிட்டுத் தோற்கடித்து ராணி மீனாட்சியின் வளர்ப்பு மகன் விஜயகுமாரனை மதுரை மன்னராக (கி. பி. 1751-ல்) முடி சூட்டித் திரும்பினார் அந்த தளபதி. அன்றைய நிலையில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அரிய சாதனை அது!. இவ்விதம் தமிழகத்தின் இதயமாக விளங்கிய மதுரை அரசியலுக்கு ஆபத்து வரும் பொழுது எல்லாம் விரைந்தோடி தீர்வுகாண உதவியவர்கள் ஆபத்து உதவிகள் சேதுமன்னர்கள். செயற்கரிய சாதனைகளைச் செய்து பெருமை சேர்த்த வரலாற்று நாயகர்கள். இந்திய நாட்டவர் அனைவரும் ஏற்றிப்போற்றும் இராமேசுவரம் திருத்தலத்தின் பாதுகாவலர் என்ற முறையிலும், மதுரை மன்னர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் காலந்தொட்டு தமிழகத்தின் எழுபத்திரண்டு பாளையக்காரர்களின் தலைவர்தளவாய் - என்ற வகையிலும் அவர்களுக்கு ஆன்மீக லெளகீக சமுதாயத்தில் பெரும் ஆதரவும் மதிப்பும் இருந்து வந்தன. இந்தக் காரணங்களினால் சேதுபதிகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அன்னிய ஆதிக்கங்களும் மோதுவ தற்குமுனையவில்லை. மாறாக, டச்சுக்காரர்களும் ஆங்கிலேயரும் தங்களது வணிக நலன்களுக்குத் தேவையான சலுகைகளை சேதுபதிகளிடம் இருந்து பெறுவதற்கு முயன்று வந்தனர். நாளடைவில் பொறாமை கொண்ட அண்டை அரசுகளான தஞ்சை மராத்தியரும். மதுரை நாயக்க மன்னர் சிலரும் மிகப் பெரிய தோல்விகளை மறவர் சீமை மண்ணில் சந்தித்தனர். தமிழகம் முழுவதற்கும் நவாபாக கி. பி. 1741-ல் நியமனம் பெற்ற வாலாஜா முகம்மதலி நெல்லைச் சீமை பாளையக்காரர்கள் அனைவரையும் அடக்கி ஒடுக்கிய பின்னர்தான் மறவர் சீமை மீது 1772-ல் படை தொடுத்தார். அதுவும் வெள்ளைக் கும்பினி யாரது கூலிப்படைகளின் பக்கபலத்துடன். 1. கமால் Dr. S. M. விடுதலைப் போரில் சேதுபதிமன்னர்(1987) பக்கம். 43. 2. Revenue Consultations. Vol. 50. A. (1793) pp. 539-56 3 Military Consultations. Vol. 42. 8–6–1772 p. 488.