பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 எஸ் எம் . கமால் --- ஊரின் பெயர் அமைந்திருப்பதிலிருந்து ஏக வீர பரசக்கர கோலாகலப் பல்லவன்' என்ற விருதுப் பெயரினையுடைய நீ மாறபாண்டியனது விருதுப் பெயராக இருக்க வேண்டுமென்பது இந்த மன்னர் சின்னமனூர் செப்பேட்டில் குறிக்கப்படுகின்ற வரகுணமகாராஜாவின் மைந்தன் ஆவார். கி.பி. ஒன்பதாவது நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரையில் ஆட்சி புரிந்த மன்னர். மேலும் நான்கெல்கையில் நாட்டுக் கணக்கு முத்திருளப் பப்பிள்ளை புஞ்சைக்கு வடக்கு என்ற தொடரிலிருந்து இராம நாதபுரம் சீமைப் பிரதானியாக இருந்த முத்திருளப்பபிள்ளையை (கி.பி. 1782-91) இது குறிப்பதாகும். ஆங்கில மொழியில் தேர்ச்சியும், நிர்வாகத்தைத் திறம்பட நடத்தும் அற்புதத் திற னும் பெற்ற இந்தப் பிரதானி அண்மையிலுள்ள உச்சிநத்தம் கிராமத்தில் வளர்ந்தவர் என்பதும் முன்னர் பரளாச்சிப் பகுதியில் நாட்டுக் கணக்கராக இருந்தவர் என வழங்கும் செவிவழிச் செய்தியினை இந்தச் செப்பேடு உறுதி செய்கின்றது.