பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 85 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : பாண்டியூர் சொக்கப்பன் சேர்வை புத்திரன் பெருமாள் சேர்வை 2. செப்பேடு பெற்றவர் ; இராமேசுவரம் திருக்கோயில் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1589 பில வங்க ஆண்டு வைகாசி மாதம் (கி. பி. 1568) 4. செப்டேட்டின் பொருள் : ஆனந்துார் கிராமம், பாப்பாக் குடியேந்தல் இராமேசுவரம் கோயிலுக்கு தானம். இராமநாதபுரத்திற்கு வடக்கே பத்துக்கல் தொலைவி லுள்ள பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சொக்கப்பன் சேர்வை மகன் பெருமாள் சேர்வை திருமலை சேதுபதி மன்னர் புண்ணிய மாக இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் அறக் கட்டளைக்கு சேதுநாட்டின் மேலமாகாண சீமையில் உள்ள ஆனந்துார் கிராமத்தையும், பாப்பாக்குடி யேந்தலையும் தானம் வழங்கியதை இந்தச் செப்பேடு குறிப்பிடுகின்றது. சேதுபதி மன்னர் புண்ணியமாக என்ற சொற்றொடரிலிருந்து மன்னரது விசுவாசத்திற்கும் அன்புக்கும் அருகதையான ஒரு உயர்ந்த அலுவலர் பெருமாள் சேர்வை என்பது புலப்படுகிறது. மன்னர் களுக்குப் பதிலாக முழு அதிகாரம் பெற்ற அவர்களது அலு வலர்களும் தானம் வழங்குவது வரலாற்றில் காணக்கூடிய இயல்பான நிகழ்ச்சி. என்றாலும் அவை மிக அருமையாகவே நிகழ்ந்துள்ளன. பெருமாள் சேர்வைக்காரரது தந்தை சொக் கப்பன் சேர்வை கான நாட்டில் புதுக்கோட்டை சீமையில் திரு