பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 41 இந்த மன்னர் பரம்பரையினரின் ஆட்சியினை தெரிந்து கொள்ளதக்க மூல ஆவணங்கள் இன்று இல்லை. அவைகளை பேணிப்பாதுகாக்கும் பொறுப்புள்ளவர்களின் தவறினால் காலம் அவைகளை விழுங்கி விட்டது. எ ஞ்சிய வைகளும் அரசு ஆவணக் காப்பகங்களில் அடைபட்டுக் கிடக்கின்றன. இந்நிலையில் சேதுபதிகளைப் பற்றிய சரியான வரலாறு இதுவரை எழுதப்பட இல்லை. இவர்களைப் பற்றிய வரலாற்றினைக் குறிப்பாக 1868-ல் அலெக்ஸாண்டர் நெல்சனும், கி. பி. 1891-ல் சற்று விரிவாக ராஜாராம்ராவும் தொகுத்து வெளியிட்டனர் பிற்காலத் தில்இந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, கி. பி. 1935-ல் பி. நடராசனும் கி. பி. 1976-ல் சேஷாத்திரியும் வரைந்த ஆய்வுரைகளிலும் 1959-ல் திருவேங்கடாச்சாரி எழுதிய நூலிலும் மிகவும் குறைவு பிற்காலத் தமிழக வரலாற்றலுக்கு இன்றியமையாத இந்த மன்னர்களது வரலாறும் கலை இலக்கிய சமுதாயப் பணிகளிலும் என்றெனினும் நினைவு கூறத்தக்கது. இவர்களைப் பற்றிய வரலாற்றுத் தடங்களில் ஒன்றான இவர் களது செப்பேடுகளில் புதிய செய்திகள் பொதிந்துள்ளன. வாரிசு இல்லாத மன்னர்கள் இந்த மன்னர்களது ஆட்சி பாரம்பரிய முறையைச் சேர்ந்தது. என்றாலும், இந்த மன்னர்களில் பெரும்பாலானவர் களுக்கு ஆண் வாரிசு இல்லை ஒரு மன்னரது மறைவிற்குப்பிறகு மறைந்த மன்னரது நெருங்கிய உறவினர் சேதுபதியாக முடி சூட்டிக்கொண்டார். கி.பி. 1604-ல் பட்டத்திற்கு வந்த உடை யான் சடைக்கத்தேவன் கி.பி. 1622-ல் மரணமடைந்த பொழுது அவரது மகன் கூத்தன் சேதுபதி மன்னரானார். அவர் ஆண் வாரிசு இல்லாமல் கி.பி. 1635-ல் இயற்கை எய்திய பொழுது, மறைந்த மன்னரது இளவல் சடைக்கன் இரண்டாவது சடைக் கண் சேதுபதி என வழங்கப்பட்டார். இவர், கி.பி. 1646-ல் இறந்த பொழுது, இவருக்கும் ஆண் வாரிசு இல்லாததால், மன்னரது உறவினர் திருமலை ரகுநாத சேதுபதி என பட்டம் சூட்டிக்கொண்டார். இந்த மன்னருக்கும் இதே நிலை ஏற்பட்டதால், இவரது மறைவின் பொழுது (கி.பி. 1678-ல்) அடுத்த உறவினர் கிழவன் என்பவர் ரெகுநாத கிழவன் சேதுபதி ஆனார். இந்த மன்னரது