பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 87 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : இராமநாதபுரம் சீமையில் உள்ள மூப்பன் மார்கள். 2. செப்பேடு பெற்றவர் : இளமனேரி நைனுக்குட்டிச் சேர்வைக்காரன் 3. செப்பேட்டின் காலம் சகம், 1613 பிரஜோற்பதி ஆண்டு வைகாசி மீ" 17 (கி பி. 1691) 4. செப்பேட்டின் பொருள் : வலையசாதி சாதிப்பிள்ளை அங்கீகாரமும், சலுகைகளும். |ந்தச் செப்பேடு சேதுபதி மன்னரால் வழங்கப்பட்டது அல்ல. என்றாலும் மன்னரது ஒப்புதலின் பேரில் ஏற்பட்ட நியாயத் தீர்வு பற்றிய காரணத்தினால் இந்தச் செப்பேட்டில் கிழவன் என்ற ரெகுநாத சேதுபதி மன்னரது நாற்பத்துநான்கு சிறப்புப் பெயர்கள் விருதாவளியாக வரையப்பட்டுள்ளன. சேதுபதி மன்னரது முந்தைய செப்பேடுகளில் காணப்படாத சில சிறப்புப் பெயர்களும் இந்தச் செப்பேட்டில் இடம் பெற்றுள்ளன. அவையாவன. பாண்டிமண்டல பிரதாபனாச்சாரியான் சோழ மண்டல பிரதிஷ்டாச்சாரியான் தொண்டை மண்டல பிரசண்டன் பஞ்சவர்ணப் பாவாடை விருதினான் சிவசமயப் பரிபாலனன். .