பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ ᏮᏮ எஸ் எம். கமால் - வேறு சில செய்திகளையும் தெரிவிக்கிற சாதனமாக இந்தச் செப்பேடு அமைந்துள்ளது. வலையர் எனப்படும் சமூகத் தினர் இராமநாதபுரம் சீமையில் எந்தெந்த ஊர்களில் வாழ்ந்து வந்தனர் என்பதையும் அவர்கள் சில நாட்களில் எத்தகைய அன்பளிப்புகளை தங்களது சமூகப் பிரதிநிதியான சாதிப் பிள்ளைக்கு வழங்கி வந்தனர் என்பதையும் அவர்களது சமுதாயச் சடங்குகளில் சாதிப்பிள்ளையின் கடமைகள் என்ன என்பதையும் இந்தச் செப்பேடு விபரமாகச் சுட்டுகிறது. மேலும் இன்றைய சில ஊர்களுக்கு முந்தைய பெயர் எவை என்பதையும் இந்தச் செப்பேட்டில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக இன்றைய வாளான்தரவை (வேளாண் தரவை) குசவன்குடி(குசவன் குழி) , காஞ்சிரங் குடி, (காஞ்சான் ஊருணி) , அழகன்குளம் (அழகங் குளம்) எம்மனங் கொண்டான் என் மண்டலமும் கொண்டான்) சுந்தரமடையான் (சுந்தரதாசிமடம்) என்பன அந்தப் பெயர்கள். முந்தைய ஊர்களது பெயர்கள் அடைப்புக் கோட்டுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. இதைப் போன்றே வலையர்களது எட்டு கிளைப் பெயர்களை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. 1. இராதான் கிளை 2. வதிபிடுங்கி கிளை 3. பூச்சிகிளை 4. பட்டங்கட்டிகிளை 5. வீரப்பின்ளைகிளை 6. படையன் கிளை 7. ஐவன் கிளை 8. கோனாண்டிக் கிளை இத்தகைய கிளைப் பிரிவுகள் பற்றிய விபரங்கள் எட்கார் தர்ஸ்டன் என்ற ஆசிரியர் தென்னிந்திய சாதிகள் பற்றி விரிவாக வரைந்த நூலில்; கூட காணப்படவில்லை. செப்பேடு குறிப்பிடுகின்ற ஊர்கள் அனைத்திலும் இன்று வலையர்கள் என்ற பிரிவினர் யாரும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இந்தச் செப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ள வலையர்கள் மீன்பிடி தொழிலை உடைய மக்கட் பிரிவினராகும். சேதுபதி சீமையின் இன்னொரு பகுதியான கானாட்டின் காடுகளில் வேட்டையாடும் தொழிலை உடையவர்களைக் குறிக்க வலையர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அவர்கள் இவர் களைப் போல மூப்பன்மார் விகுதி சேர்ப்பதில்லை. மாறாக 'அம்பலம்’ ’ என்ற விகுதியைத் தங்கள் பெயர்களில் இணைத் துக் கொள்கின்றனர். Edgar Thurston – Castes Tribes of south India. (1909) Vol. VII page. 273.8 O.