பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 எஸ். எம். கமால் மகன் அகால மரணமடைந்ததால், இவரது மறைவையொட்டி இவரது மருமகன் திருவுடையாத்தேவர் கி.பி. 1710-ல் முத்து விசைய ரகுநாத சேதுபதி ஆனார். இவருக்கு ஆண் வாரிசு இல்லாததினால் கட்டையத்தேவர், கி.பி. 1729-ல் குமார முத்து விசைய ரகுநாத சேதுபதி மன்னரானார். தொடர்ந்து சிவகுமார முத்து விசைய ரகுநாத சேதுபதி ஆகிய அனைத்து சேது மன்னர்களுக்கும் ஆண்வாரிசு இல்லையென்ற வரலாற்று உண்மை வியப்பைத் தருவதாக உள்ளது. (பார்க்க : செப்பேடுகள் எண். 15, 24, 31, 38, 43, சேதுபதிகளது செப்பேட்டுத் தொடர் களுடன் அவர்களது கீழே கொடுக்கப்பட்டுள்ள கொடி வழிப்பட்டி யலை ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த உண்மை விளங்கும். ஆட்சிக்காலம் இந்தநூலில் தொகுக்கப்பட்டுள்ள அந்த மன்னர்களது செப்பேடுகளில் இருந்து சில முக்கியமான உண்மைகள் வெளி வந்துள்ளன. குறிப்பாக மறவர் சீமையில் கி.பி. 1604-முதல் கி.பி. 1795 வரை தன்னாட்சி செய்த பதினாறு மன்னர்களில் கடைசி மன்னரான முத்துராமலிங்க சேதுபதியின் மகள் சிவகாமி நாச்சியார் தொடுத்த வழக்கின் ஆதாரங்களைக் கொண்டு சேது மன்னர்களது கொடிவழியினை திரு. ராஜாராம் ராவ் இராமநாத புரம் மானுவலில் வரைந்துள்ளார். கி.பி. 1891ல் வரையப்ப_ இந்த நூலை ஆதாரமாகக் கொண்டு இராமநாதபுரம் பற்றிய வரலாறு பல வரையப்பட்டு உள்ளன. இரண்டாவது சேதுபதி மன்னராக ஆட்சி செய்து கி.பி. 1635-ல் இயற்கை எய்திய கூத்தன் சேதுபதிக்கு ஆண் வாரிசு இல்லை அவரது காமக் கிழத்தியின் மகன் தம்பி என்ற பெத்தண்ணா சேதுபதி பட்டத் திற்கு உரிமை கொண்டாடினார். அரச குடும்பத்தினர் அவரது விருப்பத்தை ஏற்காததால் அப்பொழுது மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரது தலையீட்டை அவர் கோரினார். கூத்தன் சேதுபதிக்குப் பின்னர் மன்னராக்கப் பட்டமேறிய இரண்டாவது சடைக்கன் சேதுபதி மதுரை நாயக்கரது சமரச முயற்சியை சேது நாட்டை பாகப்பிரிவினை செய்யும் திட்டத்தை ஏற்க மறுத்தார். என்றாலும், இந்த மன்னரும் கி.பி. 1645-ல் வாரிசு இல்லாமல் இறந்த பொழுது மீண்டும் தம்பியின் கோரிக்கை எழுந்தது. திருமலை நாயக்கரது தீர்ப்பை ஏற்று