பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674 எஸ். எம் . கமா ல் சேதுபதி மன்னர் ஆட்சிக்காலத்தில் பெரிய தெய்வக்கன்னியா பிள்ளை அவர்கள் முன்னிலையாக குருக்கள் மகாசபையாரும். ஆரிய மகாஜனங்களும் ஒப்புக்கொண்டவைகளையும் பின்னர் கிழவன் சேதுபதி. முத்துவிஜய ரெகுநாத சேதுபதி மன்னர்கள் நிகழ்வுகளையெல்லாம் வாசித்துப்பார்த்து அந்த வழக்கின் முழு மையான பின்னணி, முன்னர் வழங்கப்பட்ட நியாங்கள் நடப்பு ஆகியவைகளை நன்கு உணர்ந்தவர்களாக நடுவர்கள் முடிவுக்கு வருகின்றனர். o அவர்களது தீர்ப்புரையின்படி லெட்சுமண தீர்த்தக்கரையில் குருக்கள்மார் சபையார் கையாடி வந்த மகாராஷ்டிரப் பரிவை, கூடித்திரியப் பரிவைடி குச்சாரியர் (குஜராத்) வாணிபப் பரிவை: யாரிந்த வகை ஆதாயங்களை அனைத்தையும் குருக்கள் மார் சபையார் அனுபவிக்கக் கடவர். கொங்காணியப் பரிவுை ஆதா யங்களை குருக்கள் மகாசபையார் பாதியும் இராமநாத பண்டார மடத்திற்கு பாதியுமாக அனுபவித்துக் கொள்ள வேண்டியது. இவைதவிர ஆரிய மகாஜனங்கள் கையாடி வருகிற பரிவை4 களுக்கு ஆதாயத்தில் இருபது விழுக்காடு குருக்கள் மகாசபை யாருக்கு கொடுத்துவிட வேண்டியது" . இதுவரை இவ்விதம் செய்யாது ஆரிய மகா ஜனங்கள் அதக டி பண்ணியதை குருக்கள் மாசபையாருக்குக் கொடுத்துவிடுவதுடன் இவ்விதம் மேலும் நடந்துவிடக் கூடாதெனக் கண்டிப்பு செய்ததுடன் தவறுக்கு அரண்மனையாருக்கு ஆயிரத்து இருநூறு பொன் அபராதம் அளிக்க வேண்டியது. இந்தப்படி குருக்கள் மகாசபையார் பங்கு பாகம் தீருகிற பொழுதெல்லாம் சங்கர குருக்கள் முன்னிலையாக இருந்து வர வேண்டியது. அதற்காக ஆதாயத்தில் குருக்கள்மார் சபையாரது ஜனங்களுக்கு தலைக்கு ஒரு பங்கும் சங்கர குருக்கள் இரண்டு பங்கும் பற்றிக் கொள்ள வேண்டியது என முடிவு செய்யப்பட்டது. இதற்கும் மேல் கூடுதலாக வருகின்ற பங்கில் குருக்கள் மகா சபையாருக்கு உதவி இருந்த உதயபெருமாளுக்கு ஒரு பங்கும் சேரவேண்டியது என நடுவர்களது முடிவு இந்தச் செப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.