பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68.2 எஸ். எம். கமால் திருவெற்றியூர் கிராமத்தையும் அறந்தாங்கித் தொண்டமான்கள் அவத்தானிகோட்டை, சிரத்தானியேந்தல் ஆகிய ஊர்களையும் திருநெல்வேலிப் பாளையக்காரர் முத்துவிஜய சொக்கலிங்க நாயக்கர் நம்பிபுரம் உட்பட்ட பன்னிரெண்டு ஊர்களையும் இதே கோயிலின் கைங்காரியங்களுக்காகத் தானம் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து இராமநாதபுரம் பேட்டை வணிகப்பெரு மக்களும் இந்தக் கோயில் பயன்பாட்டுக்கு மகமை ஒன்றை ஏற்படுத்தியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இராமநாதபுரம் பேட்டைக்கு வரப்பெறுகின்ற பஞ்சு, பாக்கு மிளகு, பலசரக்கு செம்பு ஆகியவைகளுக்கு பொதி ஒன்றுக்கு அரைப்பணமும் நெல், நவதானியம், வெற்றிலை, பருத்தி முதலியவைகளுக்கு உரிய மகமையும் வசூலித்து இந்தத் திருக் கோயிலின் அபிஷேக, நெய்வேதன, திருமாலை, திருவிளக்கு, திருவிழா, திருநந்தவனம், ஆகியவைகளுக்கு வழங்குவது என்ற இந்த வணிகர்களித் இசைவுமுறியாக இந்தச் செப்பேடு அமைந் துள்ளது. གང་ན་ལས་དཔལ་ས་ལ་ முந்தைய நூற்றாண்டுகளில் சேதுபதிகளது அரசப்பிரதிநிதி யாக விளங்கிய வணிக நாயகர் சீதக்காதியின் முயற்சியினால் ரெகுநாதக் கிழவன் சேதுபதியின் ஆட்சியில் செழுமை பெற்ற கடல் வாணிகமும், உள்நாட்டு வணிகமும் முத்துக்குமார் விஜய ரெகுநாத சேதுபதியின் ஆட்சியிலும் வளர்ந்துவந்துள்ளதை இந்தச் செப்பேட்டிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. பாக்கு, மிளகு ஆகிய பொருள்கள் இலங்கையிலிருந்தும், செம்பு டச்சு வணிகர்களால் வெளிநாட்டிலிருந்தும் கீழக்கரை, தேவிபட்டினம் கடல் துறைகளின் வழியாக இறக்குமதி செய்யப்பட்டன. கீழக் கரை சொக்கநாதசுவாமி கோயில் குருக்களுக்கு இரெகுநாதக் கிழவன் சேதுபதி ஏற்படுத்திய மகமையிலும் (செ. எண். 25) இதே பொருள்கள் கீழக்கரை துறைமுகத்தில் கையாளப்பட்டது ஒப்புநோக்கத்தக்கது. மகமை ஏற்படுத்திய வணிகப் பெருமக்களின் இயற்பெயர் களிலிருந்து அவர்கள் தெலுங்கு வைசியர், தமிழ் ஆயிரவைசிய செட்டியார்கள் என தெரியவருகிறது. பயில்கின்ற மொழியி னாலும் அன்றாட பாவனைகளிலும் இந்த வணிகர்களிடையே வேறுபாடுகள் மிகுந்து இருந்த பொழுதிலும், சமய நம்பிக்கையில் மிகுந்த ஒருமைப்பாட்டுடன் இயங்கி வந்தனர். ஹாலாஸ்ய