பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 எஸ். எம். கமால் (கி.பி. 1678) வழங்கியதற்கான செப்பேடுகள் (செப்பேடு எண். 23, 24) உள்ளன. இரண்ய கர்பத்தனாய திருமலை சேதுபதி அந்த நிலக்கொடையை வழங்கியதை அந்தச் செப்பேடு குறிப் பிடுகிறது. சேதுபதிகளில் கிரண்ணிய கர்ப்ப வேள்வியை இயற்றி யவர் இந்த மன்னர் ஒருவர் தான். ஆதலால் இந்தச் சிறப்பு விருதுடன் கூடிய முதல் சேதுபதி, திருமலை சேதுபதி மன்னர் மட்டும் இதற்கு அடுத்த செப்பேடு ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னரால் சக சகாப்தம் 1600 காளயுத்தி ஆண்டு வைகாசியில் (கி பி, 1678) வழங்கப்பட்டது ஆகும். இவைகளிலிருந்து திருமலை ரெகுநாத சேதுபதியின் இறப்பு கி.பி. 1678ல் நள ஆண்டு பங்குனியில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதி யான உண்மையாகும். ஆதலால் ராஜாராம் ராவ், டாக்டர் சேஷாத்திரி ஆகியோர் இந்த மன்னரது மரணம் ஏற்பட்டது. முறையே கி.பி. 1672லும் கி. பி. 1670லும் எனக் குறிப்பிட் டிருப்பதும் பொருத்தமானது அல்ல என்பது புலனாகின்றது." மேலும், முத்துவிஜய ரகுநாத சேதுபதியின் ஆட்சி முடி வுற்றது. கி.பி. 1720 என டாக்டர் சேஷாத்திரியும் கி.பி. 1725-ல் என இராமநாதபுரம் மானுவலும் கி. பி. 1726ல் என ஆசிரியர் திருவேங்கடாச்சாரியரும் வரைந்துள்ளனர். ஆனால் நமக்குக் கிடைத்துள்ள செப்பேட்டின்படி (செப்பேடு எண். 43) அந்த மன்னர் கி. பி. 1729 (சவுமிய ஆண்டு மார்கழி) வரை ஆட்சி புரிந்துள்ளார் என்ற உண்மை தெரிய வருகிறது. முத்துவிஜய ரகுநாத சேதுபதிக்கு வாரிசு இல்லாத காரணத்தால், இராமநாத புரத்தில் அவர் இறந்தவுடன் மறவர் சீமையில் நிலையான அரசு உடனே ஏற்படவில்லை என்றும் தெரிகிறது. இடைப்பட்ட குறுகிய காலத்தில் மறைந்த மன்னரது தம்பி முத்துவடுகநாதர் என்ற முத்துரகுநாதர் சேதுபதியாக இருந்து வந்துள்ளார் என்பதை அவர் கி. பி. 1780-ல் (சவுமிய ஆண்டு தை மீ) 8. Rajaram Rao -T. Manual of Ram — Samasthanaml (1891) p. 9. ដ្យ Dr. K. Sethupathis of Ramnad unpublished Thesis) 10. Setharali Dr. K. Sethupathi of Ramnad (1972) Rajaram Rao. T- manual of Ramnad Samasthanams (1891) p. 235 Thiruvankatachari. S. Sethupathis of Ramnad (1959) p. 48