பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 69 | கணக்கரும் நயினார் ஸ்தானிகர் ஆகியோரும் சுவாமி நைவேத் தியம் அபிஷேகம் முதலியவைகளை கோயில் மிராசுதாரர்களும் மேற்பார்வையிட்டு வந்தனர். இந்தப்பணிகளைச் செய்வதற்காக அவர்களுக்கு சுவந்திரம் ஊதியம் வழங்கப்பட்டதுடன் சிலருக்கு பரிவட்டம் மரியாதை களும் அளிக்கப்பட்டு வந்தன. இவைகளைத் தொடர்ந்து வேலை தாழ்வண்ணியில் (வரிகள் 29, 30) சுவாமிகாரியம் தவறாமல் பார்த்து வர (வரி 65) கர்நாடக நவாப்பின் ஆணைப்படி இவர்களனைவரும் நடுவர் ஒருவரது முன்னிலையில் கூடி இந்த இசைவுமுறியைத் தயாரித்து இராமநாத பண்டாரம் மேற்பார்த்து வர பொறுப்பு வழங்கியுள்ளனர். பண்டாரத்தின் செலவிற்கு வடித்தசாதம் நாள்தோறும் பன்னிரெண்டும் கோவில் கிராமத் தில் நாலரைக் கிராமமும் அனுபவித்துக் கொள்வதற்கு இணக் கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினையையொட்டி இராமநாதபண்டாரத்தை ஆறுகால் பீடத்தில் அமர்த்தி பரிவட்டம் அணிவித்து சேது இராமநாதபண்டாரம்’ என்ற புதிய பெயரையும் சூட்டி கோயில் தர்மகர்த்தா என்ற சிறப்பினையும் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்ததாகத் தெரியவருகிறது. இந்த நிகழ்ச்சி கோயிலின் சுவாமி சன்னிதா னத்தில் நடைபெற்றது என்ற குறிப்பும் பிச்சைக் கட்டளைக்கு பயன்படுத்திவந்த மடத்தில் பண்டாரம் இருந்து வந்தார் என்ற செய்தியும் இந்தச் செப்பேட்டில் உள்ளது. சேது நாட்டின் மிக நெருக்கடியான காலத்தில் இராமேசு வரம் திருக்கோயிலின் நிர்வாகம் இயல்பாக இயங்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை விவரிக்கும் ஆவணமாக இந்தச் செப்பேடு அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்த சேது மன்னரது பிடிப்பிலிருந்த கோயில் நிர்வாகம் பண்டா ரத்தின் முழுப்பொறுப்பிற்கு மாற்றப்பட்டது இந்தக் கோயில் வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஆகும். இந்தச் செப்பேட்டில் காணப்படும் திவானி, ஜாரி அரசரது நவாப்பு. பரவானா, கவுல், தாக்கல், மிராசுதார், மாமூல், தஸ் தரம் ஆகிய சொற்கள். அன்றைய நவாப்பின் ஆட்சிமொழியான பார்சி மொழிச் சொற்கள், மற்றும் கட்டிக் கொண்டதனாலே " வரும்படி நேமுகம் இசவு’ என்பன இத்த வட்டாரத்து வழக்குகளாகும்.