பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 3.49 -- - - பொழுது இராமநாதபுரம் வட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தானம் வழங்கப்பட்டபிறகு இந்த ஊருக்கு பிரதி நாமமாக முத்துவிஜய ரெகுநாத சேதுபதி பூபாலபுரம்’ ’ என்ற பெயர் ஏற்பட்டதை இந்தச் செப்பேட்டின் வரி (35) புலப்படுத்துகிறது. இந்த தானத்தைப் பெற்றவர்களது இயற்பெயர்கள் செப்பேட்டில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவர்களை மிகுந்த மரியாதையுடன் அபிஷேஷ வித்துவனமான மகாஜனங்கள்’’ என்ற தொடரால் குறிக்கப்பட்டுள்ளதில் இருந்து இந்த அந் தணர்கள் வேதத்தில் வல்ல அத்தியாயன பட்டர்கள் அல்லது குருக்கள் என்பதும் தெரியவருகின்றது. மண்டபம் கிராமத்தின் கீழ்க்கோடியில் கடற்கரையை யடுத்து ஒரு சத்திரமும் 'பிள்ளையார் கோவிலும் இந்த மன்ன ரால் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தன. இதற்கு சேதுக்கு வாய்த் தான் சத்திரம் அல்லது தோணித்துறை சத்திரம் என்ற பெயர் வழங்கப்பட்டது. இதன் பராமரிப்பிற்காக இந்த மன்னர் மண்டபம், தேர்போகி, மேலவயல், வளமாவூர் ஆகிய நான்கு கிராமங்களை சர்வமானியமாக வழங்கியிருந்தார். சேதுயாத்திரை யாக இங்கு வரும் பயணிகளைப் படகுகளில் ஏற்றி சுமார் இரண்டு கிலோ மீட்டர் அகலமுள்ள பாம்பன் ஆற்றைக் கடந்து பாம்பனில் கொண்டு விடுவதற்கும் இராமேசுவரத்தில் இருந்து திரும்பும் பயணிகளை பாம்பனில் இருந்து ஏற்றி இங்கு கொண்டு வரு வதற்கும் இந்த மன்னர் ஏற்பாடுகளைச் செய்திருந்தார், பாம்பன் கடற்பாலத்திட்டம் 1973-90ல் நடைமுறைப் படுத்தப்பட்ட பொழுது மதுரை பாம்பன் சாலை தேசிய நெடுஞ்சாலையாக (தற்பொழுது சேதுபதி நெடுஞ்சாலை) அமைப்பதற்கு ஏதுவாக இந்தச் சத்திரம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. பிள்ளை யார்கோவிலின் சிறு பகுதி மட்டும் சாலையையொட்டி இன்று உள்ளது. தானம் வழங்கப்பட்ட அத்தியூத்து கிராமத்தின் பெரும் நான்கு எல்கையாக வெட்டனேந்தல், ஒருவனேந்தல், திருவத்தியார் ஊருணி, மஞ்சோளாடை, தெய்வேந்திரநல்லூர் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தியூத்து கிராமத்தைத் தவிர ஏனையவை இன்றைய வழக்கில் இல்லை. அதனைப் போலவே இந்தக் கிராமத்தில் அந்தணர் குடும்பம் எதுவும் நிலைத்து இருக்கவில்லை. இராமப்பையன் அம்மானை என்ற நாடோடி இலக்கியம் இங்கு கோட்டை ஒன்று இருந்ததைக் குறிப்பிடுகிறது.