பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/705

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 38 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்து விஜய ரெகுநாத சேதுபதி காத்த தேவர் 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் பூரீ இராமநாத சுவாமி திருக்கோயில் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1636 ஜெய வருஷம் சித்திரை மீ”1 (கி.பி 1714) 4. செப்பேட்டின் பொருள்: திருக்கோயில் சுக்கிரவாரக் கட்டளைக்கு நிலக்கொடை இந்தச் செப்பேட்டினை வழங்கிய சேதுபதி மன்னரது எழுபத்து இரண்டு விருதுகள் இந்த செப்பேட்டில் காணப் படுகின்றன. இவை அனைத்தும் இந்த மன்னரது முந்தைய செப்பேடு எண் 31ல் பொறிக்கப் பட்டுள்ளவையாகும். இராமேசுவரம் இராமநாதசுவாமி பாதம் பிரியாத பர்வத வர்த்தினி அம்மனுக்கு சுக்கிரவார அறக் கட்டளையாக வழங்கப் பட்டுள்ள விபரங்களை இந்த செப்பேடு சொல்கிறது. இராமேசு வரம் திருக்கோயிலின் அர்த்தசாம அபிஷேகம், நெய்வேத்தியம் பூஜைக்கும், ஆடித்திருவிழா சுக்கிரவார உற்சவத்திற்கும் ஆகும் செலவுகளை சரிக்கட்டுவதற்கு விளத்துார் கிராமத்தையும். ஆய்க் குடி உடையாத்தேவர் தோப்பினையும் சோழியக்குடி, சிறுத்த வயல்கொடிப்புங்கு ஆகிய ஐந்து கிராமங்களையும் மற்றும் சின்னத் தொண்டி கிராமத்தின் சில பகுதிகள் நீங்கலாக நஞ்சை புன்சை நிலங்களையும் சேமனுர், விரியானேந்தல் பகுதி நஞ்செய் நிலங்