பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 37 1 - - - -- == சேத்திரர், கர்நாடகத்தார், கவரையர், வெளமர், மல்லகச்செட்டிவெள்ளாளஞ்செட்டி, மதுரைச் செட்டி, மஞ்சப்புத்துார் செட்டி, கோமுட்டி, பட்டு நூல்க்காரர். சலுப்பர், வலசை இடையர், சிவியார் இடையர், போயிண்டமார், தொட்டிய கம்பளத்தார், நாட்டு இடையர், வடுகர், குசவர் என்ற வகையான சமூகத் தினரைக் கொண்டதாக அன்றைய சமுதாயம் இருந்தது. இடைக்குல மக்களில் மூன்று வகை கொடுக்கப்பட்டுள்ளது. 1. நாட்டு இடையர் 2. வலசை இடையர் 3. சி.வியார் இடையர் என்பன. முதலாவது, இரண்டாவது, இடைக்குலமக்கள் இராம நாதபுரம் நகரின் கிழக்கு, தெற்குப் பகுதியிலும் உள்ளவர்கள். விவசாயத்திலும் கால்நடைகள் வளர்ப்பதிலும் ஈடுபட்டு இருந்த துடன் கார்த்திகை, மார்கழி மாதங்களில் வடக்கே தங்களது ஆட்டுக் கிடைகளுடன் சோழ சீமைக்கும் சென்று வந்தனர். சோழ சீமைக்குத் தங்கள் உறவினர்களது ஆட்டுக்கிடைகளை இட்டுச் சென்று ஊதியத்துடன் வீடு திரும்பியதுடன் உறவுப் பெண்களை அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதனால் இவர்களை பெண்டுக்கு மேய் க்கும் இடையர் எனக் குறிப்பிடு வதும் உண்டு. மூன்றாவது பிரிவினரான சிவிகை இடையர் என்பது சிவியார் இடையர் எனத் திரிபு பெற்றுள்ளது. இவர் களைப் பற்றி ஆசிரியர் தர்ஸ்டனும் அபிதான சிந்தாமணி ஆசிரியரும் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் பல்லக்கு துாக்கிகள் என்றும் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்தில் குடியேறியவர்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னரது பண்ணைக்கிராமமான விஜயரெகுநாத சமுத்திரம் மற்றும் அவரது மகள் அகிலாண்டேஸ்வரி பெயரிலான அகிலாண் டேஸ்வரிபுரம் ஆகியவை இன்று வழக்கில் இல்லை. திருப்பாச் சேத்திப் பகுதியில் தொண்டமான் பிரிவினர் இருந்ததை வரிகள் 33-35 தெரிவிக்கின்றன. சேர்வைக்காரன், அடப்பன் , காரியக்காரன், கணக்கப் பிள்ளை, முத்திரைக் கணக்கு-என்பன இராமநாதபுரம் சேதுபதி மன்னரது சேவையில் பணியாற்றிய அரசுப்பணியாளர்களைக் குறிப்பிடுவது ஆகும். f Edgar Thurston - Castes and Tribes of South India (1909) Vol. II p. 384, சி ங்காரவேலு முதலியார். அபிதானசிந்தாமணி (1911)