பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/711

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.2 எஸ். எம். கமால் SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS தானம் வழங்கப்பட்ட பால்குளம் இராமநாதபுரம் சீமையின் வரகுணவளநாட்டு இராஜசிங்கமங்கலம் மாகாணத்தைச் சேர்ந்தது அந்த ஊரின் எல்கை மால் வரையும் பொழுது முந்தைய பாண்டி நிலக்கூற்றின் பெயரான கைக்கி நாடு குறிக்கபபட்டிருப்பது ஒரு சிறப்பாகும். இந்த நாடு செவ்விருக்கை நாட்டுக்கு வடக்கிலும் இடையள நாட்டிற்கு தென்மேற்கிலும் தென்னாலை நாட்டிற்கு தெற்கிலும் அமைந்திருந்தது தெரிய வருகிறது. இந்தச் செப்பேட்டில் இருந்து இன்னொரு வரலாற்றுச் செய்தியும் கிடைக்கின்றது, மறவர் சீமை வீரன் ஒருவன் மாற் றார் மீதான போரில் அவர்களது கடல்துறை ஒன்றை கைப் பற்றி புகழ் சேர்த்தான் என்பது இந்த நிகழ்ச்சி எப்பொழுது எங்கு நடைபெற்றது என்பது புலப்படவில்லையாயினும் அவனது வெற்றிப் பெயரில் துறைமுகங் கொண்டான்' என்ற ஒரு காணி வளமாவூர் கண்மாயை அடுத்திருந்தது தெரிய வருகிறது. இந்தச் செப்பேட்டில் கண்டுள்ள பால்குளம் கிராமத்திற்கு மேற்கே அமைந்திருந்தது. செப்பேட்டின் வரி நாற்பதில் சொல்ல படுகின்ற கிராமம் (ஊர்) வைய்யக் கண்மாய் ஊரவயக் கண் மாய் என இப்பொழுது அரசு ஆவணங்களில் பதிவு பெற்றுள்ளது வட்டகை (வரி 36) (குளம் கோர்வை (வரி 39) குளக்கால் (வரி 38) அகிதம் (வரி 51) ஆகியவை இந்தச் வட்டாரத்திற்குரிய வழக்குகள் ஆகும்.