பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 4O7 - - = மன்னரது பிரதானி இராமலிங்கம் பிள்ளையின் சொந்தத் திருப் பணி என்பது இந்தச் செப்பேட்டிலிருந்து தெரியவருகிறது. இதனை இராமநாதபுரம் சமஸ்தான மேன்யுவலும்; உறுதி செய்கிறது. இத்தகைய அறப்பணியை அரசர் செய்யவில்லை யென்றாலும் அவரது பணியாளர் செய்த தர்மம் தாலமெல்லாம் செவ்வனே தொடர வேண்டும் என்ற சிறந்த நோக்கில் இத்த கைய திருப்பணிகளுக்கு மன்னர் சர்வமானியங்கள் வழங்கி வந்துள்ளதை இராமநாதபுரம் வரலாற்றில் காண முடிகிறது. முதன் முறையாக பார்த்திபனூர் அருகே பிடாரிசேரி என்ற இடத்தில் மங்கம்மாள் என்ற மங்கை நல்லாள் அமைத்த அன்ன சத்திரத்திற்கும் இராமேஸ்வரத்தில் கோதண்டராம செட்டி என்பவர் அமைத்த தர்ம சாலைக்கும் இராமேசுவரம் பாம்பன் சாலையில் மருத்துவக் குலத்தினர் அமைத்த திருமடத்திற்கும் ரெகுநாத திருமலை சேதுபதி மன்னர் அறக் கொடைகள் பல வழங்கி ஆதரித்துள்ளார். அவரை அடுத்து வந்த விஜயரெகு நாத சேதுபதியும் இத்தகைய அறச்செயல்களை ஊக்குவித்துள்ளார். இந்தச் செப்பேடு வழங்கிய குமார முத்து விஜய ரெகு நாத சேதுபதி தனது தளகர்த்தர் வைரவன் சேர்வைக்காரர் பெருவயல் கிராமத்தில் அமைத்த முருகன் ஆலயத்திற்கும் பல ஊர்களை வழங்கினார். மேலும், இதே தளகர்த்தர் பாம்பனிலும், யாதவ குலத்தினர் இராமேசுவரத்திலும், தளகர்த்தர் வெள்ளயன் சேர்வைக்காரர் திருப்புல்லாணியிலும் அமைத்த சத்திரத்திற்கும் அறக்கொடையை வழங்கி உதவினார். இந்தச் செப்பேட்டுச் செய்திகளிலிருந்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாத புரம் சீமையில் மன்னர் மட்டுமல்லாமல் மன்னரது குடிகளும் அறப்பணிகளை, ஆர்வத்துடன் மேற்கொண்டனர் என்பது தெரியவருகிறது. 'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி' என்பது பழமொழி அல்லவா? மேலும் இந்தச் செப்பேடு வேறு சில செய்திகளையும் தெரிவிக்கின்றன. தானம் வழங்கப்பட்ட பழையன் கால் கிராமம் இன்று பனயங்கால் புளியங்கூட்டம் என்ற பெயரிலும் பழஞ் į Rajaram Row - T – Manuval of Ramnad Samasthanam (1891)