பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 எஸ். எம். கமால் - தொகுதி சீமையின் நடுப்பகுதியில் கொத்து என்றும் தென் பகுதியில் கோர்வை என்றும் வட பகுதியில் சேர்வை என்றும்பெயரி டப்பட்டிருந்தன. விளைச்சலுக்குப் பயன்படாது இயற்கையிலேயே மேடாக அமைந்த நிலத்தின் சிறு பகுதி திட்டு என்றும் பெரும் மேடு திடல் என்றும் குறிப்பிடப்பட்டன. (மயிலாடுதிடல் கானத்திடல், நரிக்குமிச்சதிடல்.) விரிந்த பரப்பும் விவசாயத்திற் குப் பயன்படாததுமான பரவலான பூமி என இந்த சீமையில் பொட்டல் எனப்பட்டது. முனியன் பொட்டல், ஓநாய் பொட்டல், காஞ்சிரடிப் பொட்டல் சிவந்தியப்டன் பொட்டல், சோசியன் பொட்டல், என்ற சொற்கள் இந்தச் செப்பேடுகளில் இடம் பெற்றுள்ளன. இவைகளுக்கு இடையில், விளைந்த தானிய மணிகளை நீக்கிப் ஒப்படி, சூடு அடித்தல் போன்ற செயல்களுக்கு பயன்படுத்த களம் என்ற சிறிய அளவிலான நிலப்பகுதியும் இருந்தது. விவசாயம் இல்லாத பழமரங்கள், பயன்தரும் மரங்கள் கொண்ட பகுதி தோப்பு என அழைக்கப்பட்டு வந்தது பனை மரங்கள் மிகுதியாகவும் தொகுதியாகவும் இருந்த தோப்பு ஒன்றினைக் குறிக்க பனங்கூடல்' என்ற சொல் ஒரு செப்பேட்டில் பயன் படுத்தப்பட்டுள்ளது. இங்ங்னம் பலவாறு உட்பிரிவுகளைக் கொண்டு இருந்த நிலப்பகுதியின் பொதுவான எல்லை வரம்பு, வரப்பு, புரவு, பொலி, என வழக்குப் பெற்றிருந்தது. இவைகளின் பெரு எல்லைகளைக் குறிப்பிட எல்லைக்கல், சூலக்கல், குத்துக்கல் சக்கரக்கல் குழிக்கல், திருவாழிக்கல், என்பன நடப்பட்டன. சிவாலயங்களுக்கு விடப்பட்ட நிலப்பரப்பு எல்லையை குறிக்க சூலக்கல்லும் வைணவ திருக்கோயிலுக்கு வழங்கிய மானிய நில எல்லையைக் குறிப்பிட சக்கரக்கல்’ திருவாழிக்கல்' 'லும் பயன்பட்டன. மற்றும் கி. பி. 1781-ல் முத்துராமலிங்க விசைய ரகுநாத சேதுபதி மன்னர் முத்துப்பேட்டை (இராமநாதபுரம் வட்டம்) தேவாலயத்திற்கு சர்வமானியமாக வழங்கிய முத்துப் பேட்டை கிராமத்தை குறிப்பிடுவதற்கு சிலுவை பொறித்த கல் புதுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதும் அண்மை அகழ்வில் 13. കൊചേ@ ьтбот :