பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 46 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : குமார முத்து விஜய ரெகு நாத சேதுபதி காத்த தேவர் 2. செப்பேடு பெற்றவர் : பாலசுப்பிரமணியசுவாமி கோயில், இராமநாதபுரம். 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1652 சாதாரன வருடம் தை மாதம் (கி.பி. 1730) 4. செப்பேட்டின் பொருள் : இராமநாதபுரம் பாலசுப் பிரமணிய சுவாமி கோயில் சன்னதியில் சுக்கிரகாரம் பிரதிஷ்டை செய்ய நிலக் கொடை இந்தச் செப்பேட்டில் இந்த மன்னரது விருதாவளியாக எழுபத்து ஒரு விருதாவளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை யனைத்தும் முந்தைய சேதுபதி மன்னர்களது விருதாவளியாகச் சுட்டப்பட்டவைகள் தான் இராமநாதபுரம் கோட்டைக்கு கிழக்கே தாயுமான அடி களது அடக்க இடம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் தெற்கே உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி சன்னதியில் சுக்கிர காரம் பிரதிஷ்டை செய்வது தொடர்பாக அந்தக் கோயிலுக்கு செவ்விருக்கை நாட்டில் உள்ள கள்ளிக்கோட்டைக் கிராமத்தில் கணசங்கியாபாகம்-இருபத்து நான்கையும் தானம் வழங்கியதை இந்தச் செப்பேடு தெரியப்படுத்துகிறது. இந்தக் கிராமம் இன்றைய பரமக்குடி வட்டத்தில் கிழக்குப் பகுதியில் வைகை