பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 47 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : குமாரமுத்து விசைய ரெகுநாத - - சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : திருவாவடுதுறை பண்டார் 3. செப்பேட்டின் காலம் சகம் 1654 விரோதி கிருது ஆண்டு ஆவணி மீ 31ந் தேதி (கி.பி. 1-9-1731) 4. செப்பேட்டின் பொருள் : பொசுக்குடி கிராமம் பண்டார சன்னதிக்கு மடப்புரமாக வழங்கப்பட்டது இந்த செப்பேட்டினை குமாரமுத்து விசைய ரெகுநாத சேதுபதி திருவாவடுதுறை பண்டார சன்னதிக்கு வழங்கியுள்ளார் மடங்களுக்கு வழங்கப்படும் கொடைகள் மடப்புரம் ஆகும். திருவாவடுதுறை ஆதினமும் சைவ சமயத்திற்கான சிறந்த மடமாக விளங்கியதால் தானமாக வழங்கப்பட்ட பொசுக்குடி, மடப்புரம் எனப்பட்டது. இந்த மன்னரது விருதாவளியான நாற்பது சிறப்புப் பெயர்களில் வாளுக்கு அபிமன்’ என்ற ஒரே யொரு பெயர்மட்டும், புதிய விருதாகக் காணப்படுகிறது. சங்ககாலத்தில் வாழ்ந்த பிசிராந்தையார் என்ற பெரும் புலவரது ஊரான பிசிர்குடி தான் நாளடைவில் பொசுக்குடியாக மாற்றம் பெற்றுள்ளது. கடைச் சங்க இலக்கியமான புறநானூறு பிசிராந்தையாரது பாடல் எண் 67 ஆகத் தொகுக்கப்பட்டுள்ளது உணர்ச்சிதான் நட்பாம் கிழமை என்ற வள்ளுவரின் வாக்கு குக்கு எடுத்துக்காட்டாக தமது ஆருயிர் நண்பரான கோப்பெருஞ்