பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/738

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 49 (விளக்கம்) 1 , செப்பேடு வழங்கியவர் : குமார முத்து விஜய ரெகுநாத சேதுபதி காத்ததேவர் 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் இராமநாத சுவாமி திருக்கோயில் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1655 பிரமாதிச ஆண்டு கார்த்திகை மாதம் 10ந் தேதி (கி.பி. 10–11 – 1733) 4. செப்பேட்டின் பொருள் : இராமேசுவரம் திருக்கோயில் சபாபதி கட்டளைக்கு நிலக் கொடை இந்தச் செப்பேட்டை வழங்கிய மன்னரது விருதாவளியாக எழுபது சிறப்புப்பெயர்கள் இந்தச் செப்பேட்டில் காணப்படு கின்றன. அவைகள் அனைத்தும் முந்தைய சேதுபதி மன்னர் களது செப்பேட்டில் குறிக்கப்பட்டவை. இராமேசுவரம் திருக்கோயில் மூன்றாம்பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் உள்ள சபாபதி ஈசுவரருக்கு அபிஷேக நெய் வேத்தியத்திற்காக குளத்துார் கிராமம் தானம் வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்தக் கோயிலின் சுவற்றில் காணப்படும் கல்வெட்டில் இருந்து இத்தக் கட்டுமானம் பாண்டிய மன்னன் வீரபாண்டியனால் அமைக்கப்பட்டது புலனாகின்றது. இன்றைய இராமநாதபுரம் பரமக்குடி வட்டத்தில் வடகிழக்குப் பகுதியில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்தச் செப்பேடு வழங்கப்படும் ஊரை சபாபதி அம்பலத்திற்கென தனியான