பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/744

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 50 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர்

ரெகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : திருவாவடுதுறை பண்டார சன்னதி 3. செப்பேட்டின் காலம் : சகம் 1656 பிரமாதிச ஆண்டு கார்த்திகை tor 10ந் தேதி (கி.பி. 10-11-1733) 4. செப்பேட்டின் பொருள் : மயேச்சுரபூசைக்கு திருப்பக் கோட்டை கிராமம் தானம். இந்த தான சாசனத்தை வழங்கியவர் குமாரமுத்து விஜய ரெகுநாத சேதுபதி ஆவார். அவரது பொதுப்பெயரில் அளிக்கப் பட்டுள்ள இந்தச் செப்பேட்டில், அறுபத்தியெட்டு சிறப்புப் பெயர்கள் அவரது விருதாவளியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் இராமநாதசுவாமி, சுப்பிரமணிய சுவாமி பாதார விந்தன்' என்ற விருது மட்டும் புதியதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. சைவ சமயத்தின் சிறப்பான பீடமாக விளங்கிய சோழ நாட்டு திருவாவடுதுறை மடத்தின் பால் சேதுபதிகள் அனை வரும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். இந்த மடத்தின் பராமரிப்பில் உள்ள திருப்பெருந்துறை ஆவுடையார் திருக் கோயிலுக்கும் மடத்திற்கும் பல ஊர்களைச் சர்வமானியமாக வழங்கியுள்ளனர். அவைகளைத் தொடர்ந்து இந்த மன்னர், ஏற்கனவே பொசுக்குடியினை மடப்புரமாக வழங்கியிருந்தும் அந்தத் திருமடத்தின் மயேச்சுரர் பூசைக்காக திருப்பாக்கோட்டை என்ற ஊரினைத் தானமாக வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்த ஊர் இன்றைய தேவகோட்டை