பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 443 - ள்ளதை இந்த செப்பேடு தெரிவிக்கின்றது. இந்த ஊர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கொல்லனுணர் செம்பி நாட்டிலும், கங்கைகொண்டான் செவ்விருக்கை நாட்டிலும் அமைந்துள்ள தாக வரையப்பட்டுள்ளது. கொல்லனுரை செனனக்காணி’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த மன்னர் அந்த ஊரில் பிறந்தவர் என்பது புலனாகின்றது. கி. பி. 1170ல் வாரிசுரிமைக் காக பாண்டிய நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுல் பூசலில் தலை யிட்ட இலங்கைப் படைகள் நிலை கொண்டிருந்ததும், கி.பி.14ம் நூற்றாண்டில் இலங்கை மீது வெற்றிப்படை நடத்திய 'ஆரிய சக்கரவர்த்தி' என்ற பெருமகன் பிறந்ததும் இந்தச் செவ் விருக்கை நாடு என்பதை வரலாறு விளம்புகிறது. மேலும் இந்தக் கங்கை கொண்டான் என்ற சிற்றுார், தொடக்கத்தில் சோழ மன்னர்களது சாமந்தர்களான சேதிபதிகள் மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சி முடிவுற்ற பொழுது தெற்கே வந்து மறவர் சீமையில் நிலைத்து நிறுவியது. கங்கை கொண்ட இராசேந்திர சோழனது நினைவாக இந்தப் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட இரண்டு ஊர்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று கிடாரம் கொண்டான் என்பது. இன்றைய முதுகுளத்துார் வட்டத்தில் இருப்பது இன்னும் இந்த செப்பேடு வேறு சில செய்திகளைத் தெரிவிக் கிறது. அதாவது இராமேசுவரத்தை, நமது நாட்டின் பிற பகுதிகளுடன் இணைத்த அன்றை ப பயணிகளின் பாதை, மதுரை, மானாமதுரை வழியாக வைகை நதியின் தென்கரை ஒட்டி கிழக்கே இராமநாதபுரம் கோட்டைக்கு வடபகுதியில் சென்று இராமநாதபுரம் லகூஜிமிபுரத்தின் வடக்கே சேது நாடு வழியாக இராமேசுவரம், சென்று சேது பாதையுடன் இணைந்தது என்பதை சேதுபாதைக்கும் வடக்கு (வரி 43) என்பதிலிருந்து ஊகிக்க முடிகிறது. மெய்யான் ஏந்தல் புளிக்கு என்ற தொடர் இந்தப்பகுதி முன்னர் சமண சமயத்தின் பிடிப்பில் இருந்ததை நினைவுபடுத்துகின்றது. மெய்யானேந்தல் பள்ளி என்பது மெய்யானேந்தல் புளி என்று மருவியுள்ளது. இராமேசுவரம் நகர எல்லைக்குச் சற்று முன்னர் உள்ள பகுதி * மெய்யாம்புளி என்பதாகும். மெய்யான் பள்ளியே இங்கும் * மெய்யாம் புளியாக மருவியிருப்பது ஒப்புநோக்கத்தக்கது மெய்யான் அருகதேவனை குறிப்பிடும் சொல்.