பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/755

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 எஸ். எம். கமால் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சேதுபதிகளது சீமை வரிப்பாடுகள் எவையென்பதையும் இந்தச்செப்பேடு புலப் படுத்துகிறது. விளைநிலங்களில் இருந்து பெறுகின்ற நஞ்செய் புன்செய் தீர்வைகளைத் தவிர பள்வரி, பலவரி கீதாரவரி, வாணியக்குடி, செக்குவரி, ஆயம், தீர்வை ஆகியவையுடன் உம்பலம், ஊழியம் உள்ளடிமை என்ற மரபு வழி கட்டாயப் பணிகளும் கிராமங்களில் அன்று இருந்து வந்த நிலையினையும் இந்தச் செப்பேடு குறிப்பிடத்தவறவில்லை. உள்ள டிமை என்பதை கொத்தடிமையாகக் கொள்ளலாம். பழனிமலை வேலாயுத சுவாமி யார் துணை என்று முடிவுறும் இந்தச் செப்பேடு அறுபத்து இரண்டு வரிகளைக் கொண்டுள்ளது.