பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 எஸ். எம். கமால் '2ல் அரபு நாட்டில் (மதினா நகரில்) இருந்து சமயப் பணிக்காக பலநூறு தொண்டர்களுடன் செய்யது இப்ரா அ' ' ) புனிதர் தமிழகம் வந்தார். கிழக்கு இராமநாதபுரம் 'குதியில் அவரது சமயப்பணியை தடுத்த விக்கிரம பாண்டியனை வென்று தியாகியாகிய இந்தப்புனிதர் ஏர்வாடியில் அடக்கம் பெற்றுள்ளார். அவருடன் வந்த தொண்டர்களில் ஒருவர் இந்த ஈசா சாஹிப் என்ற உத்தமர் எனக் கூறப்படுகிறது. அடக்க விடத்தை நாடி வருகின்ற ஞானச் செல்வர்களுக்கு உணவு வழங்கு வதற்காக இந்த அறக்கொடையை மன்னர் வழங்கியுள்ளார். சமயக் காழ்ப்பு இல்லாமல் சமரச சன்மார்க்க நிலையில் அனைத்து மக்களையும் சேதுமன்னர்கள் ஆதரித்து வந்துள்ளனர். இந்த மன்னரது முந்தையோர்களும் குறிப்பாக திருமலைரெகு நாத சேதுபதி, கிழவன் என்ற ரெகுநாத சேதுபதி ஆகியோர் ஆட்சிக் காலத்தில் மறவர் சீமையின் குடிகளாகிய முஸ்லீம்கள் இத்தகைய அரசியல் ஊக்குவிப்புகளைப் பெற்றதை வரலாறு விளம்புகின்றது. இந்தக் கொடை சம்பந்தப்பட்ட கிழவனேரி கிராமம், இன்றைய இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் வட்டத்தில் _ள்ளது. முதுகுளத்துாருக்கு கிழக்கே பத்துக்கல் தொலைவில் திருஉத்திரகோசமங்கை சாலைக்கு சற்று வடக்கே உள்ள சிற்றுார் ஆகும். இந்தச் செப்பேட்டில் அந்தக் கிராமத்தின் நான்கு எல் கைகளும் குறிப்பிடப் பெற்றுள்ளன. இதில் கருக்கத்தி கண்மாய் கடைக் கொம்புக்கு மானிக்கனேரி, பொருத்துக்கு (வரிகள் 34, 35) என்ற தொடர்களில் இந்த வட்டார வழக்குகளா கடைக்கொம்பு, பொருத்து என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்தக் கிராமத்தின் நஞ்செய், புன்செய், திட்டு திடல்: மாவடை, மரவடை. குடி, படை, பள்ளு எல்லாம். இந்த அறக் கொடையில் கட்டுப்பட்டிருப்பதாக குறிக்கப்பட்டுள்ளது பெது வான வாசகமாகும், குடி என்பது வேளான குடிகளாகிய விவசாயிகளையும், படை என்பது அரசருக்கு அபாய 5gు களில் படைகள் பூணக்கூடிய வீரர்களையும், ஜீவிதம்' உதிரப் பட்டி' போன்ற மானியங்களை அனுபவித்து வருகின்ற விசர் குடும்பத்தினரையும் பள்ளு என்பது விவசாயப் பணிகளைச் செய்கின்ற பள்ளர்களையும் குறிப்பது ஆகும்.