பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/762

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 451 == இந்தச் செப்பேட்டில் இன்னொரு புதிய செய்தியும் இடம் பெற்றுள்ளது. சேதுபதி மன்னர்கள் புகலூரிலும், இராமேஸ்வரத் திலும் இராமநாதபுரத்திலும் இருந்து ஆட்சி செய்ததாக வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இந்தச் செப்பேட்டின் (வரி 29) படி கங்கை கொண்டான் என்ற ஊரிலும் சேதுபதிகள் இருந்து வந்தது தெரியவருகிறது. இந்தச் செப்பேட்டின் இறுதி வாசகமாக இந்த தர்மத்திற்கு தமிழனாக நான்கு வர்ணத்திலே உள்ளவர்கள், இஸ்லாமான பேர்களும்’ என்றும் கங்கைக்கரையிலேயும் சேதுவிலேயும் மக்கா, மதினாத் திலேயும் புண்ணிய தலங்களிலேயும் என்றும் வரையப்பட்டி ருப்பது செப்பேடு வாசகத்தில் ஒரு புதுமையாகும் சேதுபதி மன்னர் எந்த அளவிற்கு இஸ்லாமியச் சிறுபான்மையினரை மதித்து வந்தார் என்பதை அவர் இந்த தானத்தை வழங்கியது அல்லாமல், அந்த ஆவணமும் அவர்களது சமயநெறிக்கு பொருத்த மாக இருக்கவேண்டும் என எண்ணி, மேலே கண்டவாறு இந்த ஆவணத்தை வரைந்து இருப்பதில் இருந்த தெரிந்து கொள்ள முடிகிறது.